டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது ரிசர்வ் வங்கி பணத்தை திருடுகிறோமா.. காங்கிரஸ் நிதியமைச்சர்களை கேளுங்கள் ராகுல்.. நிர்மலா

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்பிஐயிடம் ரூ.1.76 லட்சம் கோடி வாங்கும் மத்திய அரசு.. வெளியாகும் பரபரப்பு குற்றச்சாட்டு

    டெல்லி: ரிசர்வ் வங்கியின் நிதியை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு இன்னும் திட்டமிடவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    தங்களிடம் உபரியாக உள்ள ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசிடம் வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்து அதை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் நடவடிக்கையால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட சீரழிவை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறுவதாகவும் ரிசர்வ் வங்கியின் கையிருப்பு பணத்தை மத்திய அரசு திருடுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

    ஆர்ப்பாட்டம்

    ஆர்ப்பாட்டம்

    அது போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்தது. நாடு முழுவதும் இக்கட்சியின் அனைத்து பிரிவுகளும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் அழைப்பு விடுத்தது.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் உபரி நிதியை வழங்குமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு கோரிக்கை விடவில்லை.

    முடிவு செய்யவில்லை

    முடிவு செய்யவில்லை

    ரிசர்வ் வங்கியின் வல்லுநர் குழு எடுத்த முடிவின்படியே நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.

    ராகுல்

    ராகுல்

    ஆர்பிஐ பணத்தை மத்திய அரசு திருடுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் உள்ள முன்னாள் நிதி அமைச்சர்களை ராகுல் கலந்தாலோசிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    English summary
    Central govt not yet planned to use RBI fund, says Nirmala Sitharaman. She also slams Rahul Gandhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X