டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ.5 லட்சத்துக்கு குறைவான வருமான வரி பிடித்தம் ரீஃபண்ட்... மத்திய அரசு உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: வரி செலுத்துவோருக்கு நன்மை பயக்கும் வகையில் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடிதத்தை திருப்பி அளிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இன்னும் சில வாரங்களுக்கு இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் கடுமையான பொருளாதார பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

central govt order income tax refund up to 5 lakhs release immediately

இந்நிலையில் சுமார் 15 லட்சம் பேர் வரை பயன்பெறக் கூடிய வகையில் ரூ.5 லட்சம் வரையிலான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க நிதி அமைச்சகத்தின் வருவாய்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ரூ.18,000 கோடி வரை மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அப்படியிருந்தும் அந்த தொகையை உடனே ரீஃபண்ட் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையிலும், ஏழை எளியோர் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ரூ.1.70 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் மாநில அரசுகளுக்கு பல மாதங்களாக வழங்கப்படாத ஜி எஸ்டி இழப்பீடுத் தொகையும் நேற்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் அந்த நிதியை உபயோகப்படுத்திக் கொள்ளும் எனத் தெரிகிறது.

English summary
central govt order income tax refund up to 5 lakhs release immediately
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X