டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு?

இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கான பல்வேறு விதிமுறைகள், வழிகாட்டுதல் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கான பல்வேறு விதிமுறைகள், வழிகாட்டுதல் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு | Oneindia Tamil

    இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஜூன் பாதியில் அல்லது ஜூலை இறுதிக்குள் தொடங்கப்படும் மத்திய விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. விரைவில் இதற்கான புக்கிங் தொடங்க கூட வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் இதற்கான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். இதில் 7 நாட்கள் அரசு முகாம் அல்லது பணம் கொடுத்து ஹோட்டலில் இருக்கலாம். அதன்பின் 7 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும்.

    தலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா?தலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா?

    என்ன விதிகள்

    என்ன விதிகள்

    • மருத்துவ உதவி, சிகிச்சை, பிரசவம், உறவினர்கள் மரணம் உள்ளிட்ட அவசர தேவைக்கு வரும் நபர்களுக்கு மட்டும் 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க அனுமதி அளிக்கப்படும்.
    • ஆரோக்ய சேது செயலி அனைவருக்கும் கட்டாயம்.
    • என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பது டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
    • அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே வெளிநாட்டில் இருந்து இந்தியா வர அனுமதிக்கப்படுவார்கள்.
    • இந்தியாவிற்கு அருகே எல்லையில் இருக்கும் பகுதியில் இருந்து வரும் நபர்களுக்கும் இதே விதிகள் பொருந்தும். அறிகுறி இல்லையென்றாலும் இந்த விதி பொருந்தும்.
    • எல்லோரும் தங்களது பயண விவரம் தொடங்கி காய்ச்சல், உடல் நிலை குறித்த விவரங்களை அளிக்க வேண்டும்.
    விமான நிலைய விதிகள்

    விமான நிலைய விதிகள்

    • சுகாதாரம் மற்றும் கிருமி நீக்கம் போன்ற பொருத்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விமான நிலையங்களிலும் விமானங்களுக்குள்ளும் உறுதி செய்யப்படும்.
    • சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
    • காய்ச்சல், இருமல் எதுவும் இல்லை என்று உறுதி அளிக்க வேண்டும்.
      வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் விமானம் மூலம் இந்தியா வரவில்லை என்று உறுதிப்படுத்த வேண்டும்.
    • கொரோனா அறிகுறி இருந்தால் உடனே அரசை தொடர்பு கொள்வேன் என்று இவர்கள் உறுதி அளிக்க வேண்டும்.
    • அதன்படி விமான நிலையத்தில் கண்டிப்பாக வெப்பநிலை சோதனை கருவிகள் இடம்பெற்று இருக்க வேண்டும்.
    தீவிர சுத்தம்

    தீவிர சுத்தம்

    • மக்கள் எல்லோரும் சமூக இடைவெளி விட வேண்டும். கவுண்டர் முன்பு சரியான க்யூ இருக்க வேண்டும். எல்லா பயண சாமான்களும் கண்டிப்பாக கிருமி நாசினி மூலம் ஏர்போர்ட் அதிகாரிகளால் கழுவப்பட வேண்டும். அறிகுறி இருக்கும் எல்லா நபர்களும் விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தனிமை முகாமிற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
    • கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்
      பயணிகளுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்
    • பயணிகளுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பின் வரும் விஷயங்கள் செய்யப்படும்.
    கொரோனா கேஸ்கள்

    கொரோனா கேஸ்கள்

    • அறிகுறி இல்லாத கேஸ்கள் என்றால் வீட்டிலேயே சிகிச்சை பெற அனுமதி அளிக்கப்படும்.
    • தீவிர கொரோனா கேஸ்கள் என்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.
    • கொரோனா இல்லை என்று முடிவு வந்தால் வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

    English summary
    Central govt release rules and regulations for international flight transport service which may resume soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X