டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜஸ்தானில் பாஜகவிற்கு தோல்வி பயம்.. புது வியூகத்தோடு வருகிறார் அமித்ஷா

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றேயாக வேண்டும் என்ற துடிப்பில் உள்ள பாஜக தலைமை புதிய வியூகத்தோடு களம் இறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி ராஜஸ்தானில் நடந்து வருகிறது. டிசம்பர் 7ம் தேதி, அங்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 5 ஆண்டு கால பாஜக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக வெளியாகி வரும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக அமைச்சர்கள் மீது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊழல் குற்றச்சாட்டுகள்

ஊழல் குற்றச்சாட்டுகள்

எனவே யாருக்கெல்லாம் போட்டியிட டிக்கெட் வழங்கப்படுகிறதோ அதைப்பொருத்து வெற்றி பெற முடியும் என்று பாஜக நம்புகிறது. ஊழல் குற்றச்சாட்டுகள், மக்களை மதிக்காமல் நடந்து கொண்டது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை இப்போதுள்ள பாஜக சீனியர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

ஜாதி வாக்குகள்

ஜாதி வாக்குகள்

இளைஞர்களுக்கு அதிக அளவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளார்களாம். ஜாதி ரீதியாக வாக்குகளை பெற அதற்கேற்ப சீட்டுகளை கொடுக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றனவாம்.

கோஷ்டி பூசல்

கோஷ்டி பூசல்

இதுதவிர காங்கிரசுக்குள் நடக்கும் கோஷ்டி பூசலையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பாஜக முயலுகிறது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, அக்கட்சியின், தேசிய தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். இது எதிர்க்கோஷ்டிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி, தேர்தல் பணியாற்ற சுணக்கம் காட்டி வருகிறார்கள். இதை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

பழைய முகங்கள்

பழைய முகங்கள்

பாஜகவை பொறுத்தளவில் புதிய முகங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்பது அஜென்டா. காங்கிரசோ பழைய முகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளது. வசுந்தராதான் பாஜக முதல்வர் பதவிக்கான தேர்வு என்றபோதிலும், பல புதிய முகங்களுக்கு டிக்கெட் கொடுத்து வாக்காளர்களை ஈர்க்க மத்திய பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாம். ஏபிபி டிவி சேனல் சர்வே, காங்கிரசுக்குதான் ராஜஸ்தானில் சிறப்பான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள நிலையில், இம்முறை வேட்பாளர் பட்டியலை உருவாக்க உள்ளது, ஜெய்ப்பூர் அல்ல, டெல்லி என்கிறார்கள்.

[தெலுங்கானா, மபி, சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.. டிச. 11ல் ரிசல்ட்]

English summary
The central leadership of the Bharatiya Janata Party (BJP) feels that judicious distribution of tickets and giving tickets to dynamic and young leaders in Rajasthan can change the scenario in the state. The party claims to be working on the same line. The final call on tickets will be taken by the central leadership as they are getting reports about people’s anger against ministers and senior leaders of the state for many reasons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X