டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரானார் தர்மேந்திர பிரதான்.. ஸ்டீல் துறையும் ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

Recommended Video

    Cabinet Ministers List: மத்திய அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு?.. முழு தகவல்- வீடியோ

    டெல்லி: மோடி அமைச்சரவையில் மீண்டும் இடம்பிடித்துள்ள தர்மேந்திர பிராதானுக்கு முன்பு அவர் நிர்வகித்து வந்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது இது தவிர அவருக்கு ஸ்டீல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

    மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 350 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டுமே 303 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்து கொண்டது.

    Central Minister Dharmendra Pradhan once again allocated Petroleum Department

    இதனையடுத்து பிரதமராக நேற்று மோடி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார் அவருடன் சேர்ந்து மொத்தம் 57 மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களின் துறைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி கடந்த மோடி அமைச்சரவையில் இடம் பெற்ற தர்மேந்திரபிரதான் கடைசியாக திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முயற்சி அமைச்சர் பதவி வகித்தார் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அவரிடமிருந்த பெட்ரோலியத்துறை அமைச்சகம் பறிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் தற்போது மீண்டும் அவரிடம் பெட்ரோலியத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    அமித்ஷாவுக்கு உள்துறை, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு, நிர்மலாவுக்கு நிதித்துறை ஒதுக்கீடு அமித்ஷாவுக்கு உள்துறை, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு, நிர்மலாவுக்கு நிதித்துறை ஒதுக்கீடு

    தற்போது மீண்டும் மோடி அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள தர்மேந்திர பிரதான், ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சேர் என்னுமிடத்தில் 1969-ம் ஆண்டு பிறந்தார். முன்னாள் பாஜக எம்.பி. டாக்டர் டெபெந்திர பிரதான், மகன் தான் இந்த தர்மேந்திர பிரதான் ஆவார். இவரது மனைவி மிருதுளா பிரதான் ஆவார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் புவனேஸ்வரில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் எம்ஏ மானுடவியல் படிப்பை முடித்துள்ளார்.

    கல்லூரி நாட்களிலேயே தர்மேந்திர பிரதானிடம் தலைமைப் பண்புகளை காண முடிந்தது. ஒரிசாவில் உள்ள தால்ஷர் கல்லூரியில் உயர்நிலைப் படிப்பாளராகப் படிக்கும்போது, ​​ மாணவர் சங்கத்தின் தலைவர் ஆனார். 1985-ல் தர்மேந்திரா பிரதான் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) உறுப்பினராக சேர்ந்து அரசியல் வாழ்வில் காலடி எடுத்து வைத்தார்.

    தர்மேந்திர பிரதான் 2004 ஆம் ஆண்டில் தேசிய அரசியலில் நுழைந்தார். பிரதானின் தந்தை வாஜ்பாய் அரசியலில் அமைச்சராக இருந்தவர் ஆவார். தனது மகனபான தர்மேந்திர பிரதானுக்கு வழி விட்டு அவர் போட்டியிட்ட தொகுதியை மகனை போட்டியிட வைத்தார். 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தர்மமேந்திர பிரதான், அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியடைந்தார்.

    2012ல் பீகார் மாநிலத்திலிருந்து ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2014 ம் ஆண்டு மோடி ஆட்சியின் போது தர்மேந்திர பிரதான் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுக்கான அமைச்சராக பதவி ஏற்றார். இடையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றங்களின் போது தர்மேந்திர பிரதானுக்கு திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முயற்சி அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது

    இந்நிலையில் ராஜ்யசபா பதவி 2018ல் நிறைவுற்றதை அடுத்து மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு மீண்டும் தர்மேந்திர பிரதான் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராக பதவி வகித்தார். தற்போது மீண்டும் மோடி ஆட்சியமைந்துள்ள நிலையில் மீண்டும் பிரதானுக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Daremendra Pradhan, who has been reinstated in the Modi cabinet, has been allocated the petroleum and natural gas department he has managed and the steel industry has been allocated to him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X