டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8 குண்டுவெடிப்புகள்… கடும் துயரத்தில் இலங்கை… துணை நிற்பதாக நிர்மலா சீதாராமன் டுவீட்

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள், இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

    டெல்லி: கடும் துயரத்தை சந்தித்துள்ள இலங்கை மக்களுக்கு துணையாக நிற்போம் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    ஈஸ்டர் தினமான இன்றைய தினம் இலங்கை மக்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. காலை முதல் 8 இடங்களில் தொடர்ந்து குண்டு வெடிப்புகள், எங்கும் மரண ஓலம் என்று அந்நாட்டு மக்கள் துடித்து தான் போயினர்.

    என்ன நடக்கிறது? எதற்காக இந்த கொடூர தாக்குதல் என்று அந்த மக்களுக்கும் தெரியவில்லை. அரசுக்கும் புரியவில்லை. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் நாடு முழுவதும் உடடினயாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

    தொடர் விடுமுறை காரணமாக ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பாத வங்கிகள்.. மக்கள் கடும் அவதி தொடர் விடுமுறை காரணமாக ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பாத வங்கிகள்.. மக்கள் கடும் அவதி

    நிர்மலா சீதாராமன் கண்டனம்

    நிர்மலா சீதாராமன் கண்டனம்

    அதிபர் சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடி என பலரும் இலங்கையில் நிகழ்ந்த கொடூர தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    துணையாக இருப்போம்

    இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: கடும் துயரத்தை சந்தித்துள்ள இலங்கை மக்களுக்கு துணையாக நிற்போம். குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன் என்று அவர் அதில் கூறியுள்ளார்.

    ராகுல் காந்தி கண்டனம்

    ராகுல் காந்தி கண்டனம்

    இதேபோன்று காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தியும் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

    வேதனை தருகிறது

    இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகள் மிகவும் வேதனையை தருகிறது. தீவிரவாதத்தின் கொடூரமான இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

    இரங்கல் தெரிவிப்பு

    இரங்கல் தெரிவிப்பு

    உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் அதில் கூறியுள்ளார்.

    English summary
    Central minister Nirmala Sitharaman and Congress president Rahul Gandhi condemns srilanka terror attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X