டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்று ஒட்டலில் பாத்திரம் கழுவிய ஸ்மிருதி .. இன்று ராகுலை வீழ்த்தி அமைச்சராகிய சாதனை மங்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi cabinet ministers list | பிரதமரானார் மோடி! அமைச்சர்களாகிய அமித்ஷா-ஜெய்சங்கர்

    டெல்லி ;நாம் இந்த உலகத்தில் மற்றவர்கள் செய்ய முடியாத, செய்ய நினைக்காத அற்புதங்களை நிகழ்த்தி காட்டில் உலகம் தோள் மேல் வைத்து தூக்கி கொண்டாடும். அப்படிப்பட்ட ஒருவர் தான் ஸ்மிருதி இராணி, ஒரு காலத்தில் மும்பை உள்ள ஓட்டலில் பாத்திரங்கள் கழுவியர். இன்று தனது அபார முயற்சியால் நடிகையாகி, அரசியல்வாதியாக மாறினார். இப்போது காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளரான ராகுல் காந்தியை தோற்கடித்து எம்பியாகி, நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

    ஆண் ஆதிக்கம் மிகுந்த இந்த சமூகத்தில் ஒரு பெண், சினிமாவில் அரசியலில் ஜொலிப்பது என்பது மிக கடினம். ஆனால் எந்த பின்புலமும் இல்லாமல் வறுமையில் பிறந்து சாதித்துள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி. பெங்காலி தாய்க்கும், மாகராஷ்டிராவைச் சேர்ந்த பஞ்சாபி தந்தைக்கும் 3வது மகளாக 1976ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பிறந்தவர் தான் ஸ்மிருதி இராணி.

    central minister smriti irani biography

    பள்ளிப்படிப்பை தாண்டாத இவர், ஒரு காலத்தில் மும்பையில் உள்ள ஓட்டலில் பாத்திரங்கள் கழுவும் வேலை செய்துள்ளார். 1998ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று முதல் 9 இடங்களுக்குள் வர முடியவில்லை. அதன் பிறகு பொலியான் என்ற ஆல்பம் பாடலில் ஸ்மிருதி நடித்தார்.அதன் பிறகு சாவன் மெய்ன் டக் காய் ஆக், ஆடிஸ், கும் ஹயின் காய் அஜய் அவுர் காய் உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார் அதன்பிறகு பல தொடர்களில் நடித்தவர் 2006ம் ஆண்டு ராமாயணம் தொடரில் நடித்தார் இதன் மூலம் நடிகையாக பெரும் புகழ்பெற்றார்.

    முன்னதாக ஸ்மிருதி இராணி 2003 ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2004ம் ஆண்டு மகாராஷ்டிரா இளைஞரணி துணை தலைவியா பணியாற்றினார். ஸ்மிருதி இராணி கபில் சிபிலை எதிர்த்து 2004ம் ஆண்டு சாந்தினி சௌக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2014ம் ஆண்டு அமேதியில் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும் மாநிலங்களவை எம்பியாக தேர்வான ஸ்மிருதி, மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், ஜவுளித்துறை அமைச்சராகவும் தேர்வு ஆனார்.

    இப்போது 2019ம் ஆண்டு மீண்டும் அமேதியில் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் நேரு வம்வசத்தின் பாரம்பரிய தொகுதியான அமேதியை பாஜக முதல்முறையாக கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றியால் ஸ்மிருதிஇராணியை பாஜகவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். இப்போது மோடி அவரது கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்கி கௌரவித்துள்ளார்.

    English summary
    central minister smriti irani biography, she win against rahul gandhi in amethi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X