டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் சிறிய அளவில் கொரோனா சமூக பரவல்.. 9 மாதங்களில் முதல் முறையாக ஒப்புக் கொண்ட மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் சில மாநிலங்களில் சில மாவட்டங்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளது என மத்திய அரசு முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் 75 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இந்த 9 மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா சமூகபரவலாக மாறியுள்ளதாக மத்திய அரசு முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு.. உங்கள் மாவட்டத்தில் எத்தனை?தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு.. உங்கள் மாவட்டத்தில் எத்தனை?

கருத்து

கருத்து

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்திய உரையாடலில் 6ஆவது வாரமாக அவரிடம் மேற்கு வங்கத்தில் சமூகபரவல் என சொல்லப்படுகிறதே. அது குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டது.

மாவட்டங்கள்

மாவட்டங்கள்

அதற்கு ஹர்ஷவர்தன் கூறுகையில் மேற்கு வங்கத்தில் அண்மைக்காலமாக சமூக பரவல் இருப்பதாக மாநில அரசு அறிக்கை அனுப்பியுள்ளது. மேற்கு வங்கம் உள்பட பல மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சமூக பரவல்

சமூக பரவல்

குறிப்பாக அடர்ந்த பகுதிகளில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளது. எனினும் நாடு முழுவதும் சமூக பரவல் இல்லை. குறிப்பிட்ட மாநிலங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே சமூக பரவல் ஏற்பட்டுள்ளது என்றார். இத்தனை மாதங்களில் சமூக பரவலை முதல்முறையாக மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

கொரோனா

கொரோனா

சமூக பரவல் குறித்த கேள்வி எழுப்பினாலே அது இந்தியாவில் இல்லை என எப்போதும் மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் சமூக பரவல் குறித்து பேசியிருந்தன. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் 3ஆவது நிலைக்கு சென்றுவிட்டதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவின் நிலைகள்

கொரோனாவின் நிலைகள்

கொரோனா மொத்தம் 4 நிலைகளை கொண்டுள்ளது. முதல் நிலை வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் மூலம் கொரோனா பரவுதல், இரண்டாவது நிலை உள்ளூரில் உள்ளவர்களுக்கு கொரோனா பரவுதல், 3ஆவது நிலை சமூக பரவல், 4ஆவது நிலை தொற்று நோய் போல் பரவுதல் ஆகும். தற்போது இந்தியாவில் முதல் இரு நிலைகளே உள்ளன.

English summary
Central Government accepts there is a community transmission in India limited to some districts in some states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X