டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்துறை அமைச்சகத்தின் காஷ்மீர் விவகாரங்களுக்கான மூத்த பாதுகாப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்

Google Oneindia Tamil News

டெல்லி: உள்துறை அமைச்சகத்தின் காஷ்மீர் விவகாரங்களுக்கான மூத்த பாதுகாப்பு ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கே. விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியான விஜயகுமார் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பணியாற்றியவர். இவரது தலைமையிலான அதிரடிப்படைதான் சந்தனக் கடத்தல் வீரப்பனை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றது.

Centre appoints former IPS officer K Vijay Kumar as new senior security advisor in Ministry of Home Affairs

பணி ஓய்வுபெற்ற பின்னர் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் மாநிலங்களின் ஆலோசகராகவும் ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார் விஜயகுமார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட போது தமது பணி நிறைவடைந்துவிட்டது என விஜயகுமார் கூறியிருந்தார்.

கர்நாடகா இடைத்தேர்தல்: 8 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் பாஜக- எக்ஸிட் போல் முடிவுகள்கர்நாடகா இடைத்தேர்தல்: 8 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் பாஜக- எக்ஸிட் போல் முடிவுகள்

தற்போது உள்துறை அமைச்சகத்தின் காஷ்மீர் விவகாரங்களுக்கான மூத்த பாதுகாப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாவோயிஸ்டுகள் பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கான மூத்த பாதுகாப்பு ஆலோசகராகவும் விஜயகுமார் பணியாற்றுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவர் இப்பதவியில் ஓராண்டு காலம் நீடிப்பார் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

English summary
Centre today appointed former IPS officer K Vijay Kumar as the new senior security advisor in Ministry of Home Affairs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X