டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வணிகர்கள் கடும் எதிர்ப்பு.. ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்க மத்திய அரசு தடை

Google Oneindia Tamil News

டெல்லி: சிறிய வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நாட்டின் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருட்களை தாற்காலிகமாக விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்து. அதேநேரம் அத்தியாவசிமான பொருட்களை டெலிவரி செய்ய ஈ காமர்ஸ் நிறுவனங்களுக்கு எந்த தடையும் இல்லை.

Recommended Video

    தங்கம் விலை.. விரைவில் ரூ.50000த்தை எட்டும் ஆபத்து.. அதிர்ச்சி காரணம்?

    கொரோனா வைரஸ் நோயை எதிர்த்துப் போராடும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடியால் மார்ச் 24 அன்று 21 நாட்களுக்கு லாக்டவுன் அறிவித்தார். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் தவிர அனைத்து தொழில்களும் முடங்கின. பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் இந்த லாக்டவுனை மே 3 வரை நீட்டித்தும், அதே வேளையில், நாட்டின் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 20 முதல் சில தொழிற்சாலைகள், சிலசிறுகுறு தொழில்கள் இயங்க அனுமதிக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

    கொரோனா பாதிப்பு குறைவான இடங்களில் இன்று நள்ளிரவு முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு கொரோனா பாதிப்பு குறைவான இடங்களில் இன்று நள்ளிரவு முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு

     ஈ-காமர்ஸ்க்கு அனுமதி

    ஈ-காமர்ஸ்க்கு அனுமதி

    இது தொடர்பாக விரிவான அறிவிப்பு ஏப்ரல் 15 ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக இல்லாத பகுதிகளில் ஈ-காமர்ஸ் தளங்கள் முழுமையாக செயல்படலாம் என்றும் அனைத்து பொருட்களையும் விற்க மத்திய அரசு அனுமதி அளித்தது. பொருட்களை எடுத்து டெலிவரி செய்வதற்கு வாகனங்களுக்கு பாஸ் வழங்கலாம் என்று அறிவித்தார். இதனால் முழு அளவிலான நடவடிக்கைகளுக்கு ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தயாராகி வந்தன.

    ஏமாற்றம் அளிக்கிறது

    ஏமாற்றம் அளிக்கிறது

    இதற்கு சிறிய வியாபரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஐடி) உள்ளிட்ட பல்வேறு வர்த்தகர்களின் குழுக்கள் ஆன்லைன் நிறுவனங்கள் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. உள்ளூர் வர்த்தகர்களை அத்தியாவசியமற்ற பொருட்களை விற்க அனுமதிக்காத நிலையில். , ஈ-காமர்ஸ் தளங்களை அனுமதிப்பது வர்த்தக ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என்றும் அரசின் முடிவு மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவும் வர்த்தக கூட்டமைப்பு வேதனை தெரிவித்து. இதுதொடர்பாக ஏப்ரல் 18 அன்று அரசுக்கு கடிதம் அந்த கூட்டமைப்பு எழுதியது.

    வர்த்தக கூட்டமைப்பு

    வர்த்தக கூட்டமைப்பு

    அத்துடன் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் ஒரு ட்வீட்டில் இந்தியாவின் 7 கோடி வர்த்தகர்களின் நலனுக்காக பிரதமர் மோடி அரசு, அத்தியாவசியமற்ற பொருட்களை இ காமர்ஸ் நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதிக்ககூடாது எனறு கூறி பிரதமர் மோடி, அமித்ஷா, பியூஸ் கோயல் உள்ளிட்டோரை டேக் செய்திருந்தார்,

    அத்தியாவசியமற்ற பொருட்கள்

    அத்தியாவசியமற்ற பொருட்கள்

    இதையடுத்து உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் இன்று வெளியிட்ட டுவிட் பதிவில், ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருட்களை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார். அதேநேரம் அத்தியாவசிமான பொருட்களை டெலிவரி செய்ய இகார்மஸ் நிறுவனங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கி உள்ளன.

    English summary
    Centre bans e-commerce platforms from delivering non-essential items due to Under pressure from small traders
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X