டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இங்கிட்டு பாக்... அங்கிட்டு சீனா.. தெரிந்தே நெருப்பில் கைகளை சுட்டுக் கொண்ட மத்திய அரசு.. காங்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பா.ஜ.கவை வீழ்த்தும் சக்தியாக காங்கிரஸ் திகழும்: நாராயணசாமி நம்பிக்கை!

    டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்குவதற்கு முன்னர் அப்பகுதி மக்களிடம் மத்திய அரசு பொது வாக்கெடுப்பு நடத்தியிருக்கலாம் என காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் பிரச்சினை என்பது நேற்று இன்றைக்கு வந்த பிரச்சினை அல்ல. காலம் காலமாக நடந்து வரும் பிரச்சினையாகும். இதை தீர்ப்பது என்பது சிம்லா ஒப்பந்தத்தின்படி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் மட்டுமே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டியதாகும்.

    இந்த நிலையில் தீவிரவாதத்தை ஒடுக்கும் நோக்கிலும் காஷ்மீரை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. மேலும் அதற்கான மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

    தேசம்

    தேசம்

    இதை எதிர்க்கட்சியினர் எதிர்த்து வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில் இந்த தேசத்தை எத்தகைய பிரச்சினையில் மத்திய அரசு கொண்டு போய் நிறுத்திவிட்டது என்பதை பாருங்கள்.

    கையை சுட்ட மத்திய அரசு

    கையை சுட்ட மத்திய அரசு

    35 ஏ சட்டப்பிரிவானது 1927-ஆம் ஆண்டு முதல் காஷ்மீர் ஆட்சியாளர்களால் தொடர்ந்து வரும் சட்டமாகும். மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சிந்தித்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் காஷ்மீர் கையை விட்டு சென்றுவிடும்.

    திக் விஜய் சிங்

    திக் விஜய் சிங்

    காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் மத்திய அரசு தெரிந்தே தனது கைகளை நெருப்பில் வைத்து சுட்டுக் கொண்டது. இதனால் ஒரு பக்கம் பாகிஸ்தானும் மறு பக்கம் சீனாவும் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து கொண்டே தான் இருக்கும் என திக் விஜய் சிங் தெரிவித்தார்.

    உலக நாடுகள்

    உலக நாடுகள்

    இதனிடையே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்டது. அப்போது இந்தியா, காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு பிரச்சினையாகும். உண்மையை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என உலக நாடுகள் கூறிவிட்டது. இதுவரை பாகிஸ்தானுக்கு எந்த உலக நாடுகளும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

    English summary
    Congress Senior Leader DigVijay Singh says that Centre burnt its hands by revoking Article 370 in Jammu Kashmir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X