டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக கடன் வாங்க முடியாது: ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக மத்திய அரசு கடன் வாங்க முடியாது: மாநில அரசுகள் தேவைப்பட்டால் வெளியில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசு கையை விரித்துவிட்டது.

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரவேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. இது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. திங்கள்கிழமையன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மீண்டும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது.

Centre cannot borrow to make up for GST shortfall: Finance minister Nirmala Sitharaman

இந்த கூட்டத்திலும் மாநில அரசுகள், ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை வலியுறுத்தின. ஆனால் மத்திய அரசோ, தம்மிடம் நிதி இல்லை- கடனும் வாங்க முடியாது; மாநில அரசுகள் கடன்வாங்க ஏற்பாடு செய்கிறோம் என கூறியது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

சங் பரிவாரங்களால் ஓட விடப்பட்டீர்களே.. மறந்துட்டீங்களா குஷ்பு.. நினைவூட்டும் பெரியாரிஸ்டுகள்!சங் பரிவாரங்களால் ஓட விடப்பட்டீர்களே.. மறந்துட்டீங்களா குஷ்பு.. நினைவூட்டும் பெரியாரிஸ்டுகள்!

மாநிலங்கள், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கடனுக்கான கால அவகாசம் 50 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மாநில அரசுகள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கின்றன. மத்திய அரசால் தற்போதைய சூழ்நிலையில் ஏன் கடன் வாங்க இயலாது என்பது குறித்து மாநிலங்களுக்கு விளக்கம் தரப்பட்டது.

Centre cannot borrow to make up for GST shortfall: Finance minister Nirmala Sitharaman

இதனை 12 மாநிலங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. மாநிலங்கள் தேவைப்பட்டால் வெளியே கடன் வாங்கலாம். கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதிதேவைப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு விரைவில் உரிய பதில் தரும்.

Centre cannot borrow to make up for GST shortfall: Finance minister Nirmala Sitharaman

ஜி.எஸ்.டி. இழப்பீடு தொடர்பாக மாநிலங்களுடன் எந்த பிரச்சனையும் இல்லை. உரிய காலத்தில் நிச்சயம் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய தமிழக அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை ரூ 10,774.98 கோடியை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

English summary
Finance minister Nirmala Sitharaman said that Centre cannot borrow to make up for GST shortfall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X