டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ.3.6 லட்சம் கோடி கொடுங்கள்.. ஆர்பிஐயிடம் கேட்கும் மத்திய அரசு.. என்ன நடக்கிறது?

மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் மொத்தம் 3.6 லட்சம் கோடி ரூபாய் பணம் கேட்க உள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் மொத்தம் 3.6 லட்சம் கோடி ரூபாய் பணம் கேட்க உள்ளது

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்று பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில்தான் ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு பணம் கேட்க உள்ளது. இதனால் விரைவில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது.

பணம் கேட்கிறது

பணம் கேட்கிறது

இந்த நிலையில் மத்திய அரசு ஆர்பிஐயிடம் மொத்தம் 3.6 லட்சம் கோடி ரூபாய் பணம் கேட்க உள்ளது. நிதி பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் அரசுக்கு உதவ ஆர்பிஐ வைத்திருக்கும் தொகையான 9.6 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 3.6 கோடி ரூபாய் மத்திய அரசு கேட்க உள்ளது. நவம்பர் 19ம் தேதி நடக்கும் கூட்டத்தில் இந்த பணத்தை கேட்க உள்ளார்.

ஏன் கேட்கிறது

ஏன் கேட்கிறது

இந்த நிலையில் ஆர்பிஐ, தாங்கள் வைத்திருக்க வேண்டிய தொகையை விட அதிக தொகையை சேர்த்து வைத்துள்ளது. இந்த பணத்தை அரசு வங்கிகளிடம் கொடுக்க வேண்டும். இது அந்த வங்கிகளின் கடன் தொடர்பான பண பரிவர்த்தனைக்கு உதவும் என்று மத்திய அரசு கேட்டுள்ளது. ஆர்பிஐயிடம் அரசு ஏற்கனவே இந்த் பணத்தை கேட்டுவிட்டதாகவும் தகவல்கள் வருகிறது.

பெரிய பிரச்சனை

பெரிய பிரச்சனை

இதுதான் தற்போது பெரிய பிரச்சனையாகி உள்ளது. இப்படி ஆர்பிஐயிடம் பணம் கேட்பது பெரிய பொருளாதார சீர்குலைவிற்கு வழிவகுக்கும் என்று பொருளாதர நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அதேபோல் ஆர்பிஐயையும், தங்களிடம் சரியான அளவுதான் பணம் கையிருப்பு உள்ளது என்று கூறியுள்ளது. இதனால் அரசுக்கும் ஆர்பிஐக்கு இடையே மீண்டும் பிரச்சனை முற்றியுள்ளது.

விலகலா?

விலகலா?

இந்த நிலையில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையில் உள்ள பிரச்சனை உச்சமும் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் விரைவில் பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது. நவம்பர் 19 அன்று இதுகுறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

English summary
Centre decides to push RBI to give over Rs 3.6 Lakh crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X