டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விவசாயிகள் போராட்டம்...இன்று 5ம் கட்ட பேச்சுவார்த்தை.... முடிவு கிடைக்குமா!

Google Oneindia Tamil News

டெல்லி : வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து 10-வது நாளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இன்று நடைபெற உள்ள 5ம் கட்ட பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் 8-ம் தேதி நாடு தழுவிய பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் அதற்குள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது.

 Centre, farmers fifth round of talks today

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 10-வது நாளாக போராடி வருகின்றனர். மத்திய அரசு போராடி வரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதுவரை விவசாயிகளுடன் 4 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. ஆனால் இதில் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை. இன்று 5ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது.

மதியம் 2 மணிக்கு நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். இன்று போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே 8-ந்தேதி நாடு தழுவிய பந்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்து உள்ளதால் உடனடியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது.

English summary
The 5th phase of talks between the central government and the farmers on the Delhi struggle is taking place today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X