டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓமிக்ரான் வைரஸ்.. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. முழு விவரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த புதிய வகை உருமாறிய கொரோனா B.1.1529 என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது.

30 முறை உருமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படும் இந்த மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

centre has imposed various restrictions on airports for foreigners due to the threat of the Omicron virus

மத்திய அரசு உத்தரவு

ஓமிக்ரான் வைரசால் இந்தியாவும் உஷராகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிடம் இருந்து வருபவர்களை விமான நிலையங்களில் தீவிரமாக பரிசோதிக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஓமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு:-

centre has imposed various restrictions on airports for foreigners due to the threat of the Omicron virus

பின்வரும் விதிகள்

* இந்தியாவிற்கு வரும் ஒவ்வொரு சர்வதேச பயணிகளும் தங்களை பற்றிய சுய அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்து கொரோனா நெகட்டிவ் RT-PCR சோதனை அறிக்கையை காட்ட வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றாவிட்டாலும் அவர்கள் இந்தியாவுக்குள் நுழைய முடியாது.

* தென்னாப்பிரிக்கா போன்ற ஓமிக்ரான் வைரஸ் ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு RT-PCR சோதனைக்கான மாதிரிகளை கொடுக்க வேண்டும். பாசிட்டிவ் கண்டறியப்பட்ட எவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

ஒமிக்ரான் கொரோனா: மூன்றாவது அலையை எதிர்கொள்ள இந்தியா தயாரா?ஒமிக்ரான் கொரோனா: மூன்றாவது அலையை எதிர்கொள்ள இந்தியா தயாரா?

* அவர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டாரா என்பதை அறிய மரபணு சோதனைக்கு அனுப்பப்படும். அவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருந்தால் மிக கடுமையான பாதிக்கப்பட்டிருந்தால், கடுமையான தனிமைப்படுத்தல் விதிகள் இருக்கும்.

* மரபணு சோதனையில் ஓமிக்ரான் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தாலும் ஏழு நாட்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். 8-ம் நாள் அவர்களுக்கு மீண்டும் சோதனை நடத்தப்படும் புதிய வைரஸ் .ஆபத்தில் இல்லாத நாடுகளில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் வந்தாலும் இரண்டு வாரங்களுக்கு தனிமையில் இருப்பது அவசியம்.

English summary
The federal government has imposed various restrictions on airports for foreigners due to the threat of the Omicron virus. It is necessary to be alone for two weeks even if the corona comes negative
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X