டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அவசர அழைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க தமிழக எம்பிக்களுக்கு மத்திய அரசு அவசரமாக அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மும்மொழித் திட்டத்தை வலுக்கட்டாயமாக புகுத்துவதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் இதற்கு எதிரான போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன கஸ்தூரி ரங்கன் குழு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கைக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Centre invites Tamilnadu MPs to discuss about New Education Policy

கஸ்தூரி ரங்கன் குழுவின் வரைவு அறிக்கையில் நாடு முழுவதிலும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை திணிக்க மத்திய அரசு முற்படும் என்பதால் இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு தரப்பினருமு் புதிய கல்வி கொள்கை இந்தி திணிப்பு என்பதுடன் மட்டுமல்லாமல் கூட்டாட்சி தத்துவத்தும் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி அம்சங்களுக்கு வேட்டு வைக்க கூடியது என எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக திமுக எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க வருமாறு தமிழக எம்.பி.களுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக எம்.பி.களிடம் குறித்து விவாதிக்க உள்ளதாக பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள், அனைவருக்கும் மத்திய மனிதவள அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

English summary
Centre invites Tamilnadu MPs to discuss about New Education Policy on August 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X