டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தாக்கம்- பேரிடர் மீட்பு நிதியை மாநில அரசுகள் பயன்படுத்துதல் குறித்து அறிவுறுத்தல்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேரிடர் மீட்பு நிதியை மாநில அரசுகள் பயன்படுத்துதல் குறித்த அறிவுறுத்தலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Recommended Video

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 139 ஆக உயர்வு

    இது தொடர்பாக மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் பேரிடர் மீட்பு நிதியை எப்படி பயன்படுத்துவது என வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன.

    Centre issues notification on Assistances from SDRF

    உதாரணமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கண்காணிப்பு அறைகள், மருத்துவ உதவிகள் ஆகியவற்றுக்கு பேரிடர் மீட்பு நிதியில் இருந்து எத்தனை விழுக்காடு ஒதுக்கீடு செய்வது? எப்படி ஒப்புதல் பெறுவது என்பதை இந்த சுற்றறிக்கை விவரிக்கிறது.

    கொரோனா பரிசோதனைக் கூடங்கள் அமைத்தல், பரிசோதனைக் கருவிகள், பாதுகாப்பு பணியாளர்கள் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு இருக்க வேண்டும்? இதற்கான ஒப்புதலை அளிப்பது யார்? என்கிற நிர்வாக விவரங்கள் மத்திய அரசின் சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

    இத்தகைய ஏற்பாடுகள் மூலம் ஒவ்வொரு அவசரகால நடவடிக்கைக்கும் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை. இது ஒரு தொலைநோக்கு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

    English summary
    Centre issued a notification on Assistances from SDRF for Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X