டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, மும்மொழி திட்டம்- புதிய கல்வி கொள்கை தமிழில் முழுமையாக!

Google Oneindia Tamil News

டெல்லி: 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை. அதேநேரத்தில் மும்மொழிக் கொள்கையும் அமல்படுத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கிறது இப்புதிய கல்வி கொள்கை.

புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. புதிய கல்வி கொள்கை மீது நாடு முழுவதும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.,

Centre New Education Policy in Tamil

புதிய கல்வி கொள்கையின் பல்வேறு அம்சங்களை தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. புதிய கல்வி கொள்கையின் மும்மொழிக் கொள்கை வருத்தம் அளிக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக ஆராய குழு ஒன்றையும் தமிழக அரசு அமைத்துள்ளது. சமூக வலைதளங்களிலும் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதங்கள் தொடருகின்றன.

புதிய கல்வி கொள்கையின் அம்சங்கள் குறித்து ஆராய கல்வியாளர்கள், அதிகாரிகள் கொண்ட குழு - தமிழக அரசு புதிய கல்வி கொள்கையின் அம்சங்கள் குறித்து ஆராய கல்வியாளர்கள், அதிகாரிகள் கொண்ட குழு - தமிழக அரசு

இதனிடையே புதிய கல்வி கொள்கையை அப்படியே முழுமையாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மக்களின் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் விழியன் என்பவர் இதை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

ஆங்கிலத்தில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புதிய கல்வி கொள்கையை அதன் உள்ளடக்கம் மாறாமல், சிதைக்காமல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை விவாதங்களுக்கு இந்த மொழி பெயர்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

English summary
Here is the Tamil Translation of Centre' New Education Policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X