டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களை குறிவைக்கும் மத்திய அரசு.. ஆதார் எண்ணை கட்டாயமாக்க தீவிரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் கட்டுக்குள் உள்ளதாக மோடி எண்ணுகிறார்: ட்ரம்ப் அதிரடி

    டெல்லி: இந்தியாவை தொடர்ந்து தற்போது காஷ்மீரிலும் அனைத்துக்கும் ஆதார் எண் என்ற திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாகியுள்ளது. இது வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் செய்து முடிக்கப்படும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கொண்டு வந்தது. மத்திய அரசின் திட்டங்களையும் மானியங்களையும் பெற 12 இலக்க ஆதார் எண் அவசியம் என்பதால் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் அலைந்து திரிந்து எடுத்தனர்.

    மேலும் இந்த ஆதார் எண்ணானது வங்கிக் கணக்கு, பான் எண் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டது. கண்ணின் விழித்திரை, கைரேகை உள்ளிட்டவை எடுத்துக் கொள்ளப்படுவதால் இதில் போலி எண் உருவாகவோ ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட எண்கள் உருவாகவோ முடியாது.

    வாங்க ஜம்முன்னு போங்க.. பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு வாங்க ஜம்முன்னு போங்க.. பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு

    காஷ்மீர்

    காஷ்மீர்

    இந்த நிலையில் இந்தியா முழுவதும் இந்த திட்டம் பரந்து விரிந்திருந்த போதிலும் காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு அமலில் இருந்ததால் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இயற்றும் சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாத நிலை இருந்தது.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    தற்போது 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து திட்டங்களும், சட்டங்களும் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தும். இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள அனைத்து மக்களும் மத்திய அரசின் திட்டங்களை பெறவும், மானியத்தை பெறவும் ஆதார் எண் அவசியம் என்பதால் அந்த திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாகவுள்ளது.

    முடுக்கிவிட

    முடுக்கிவிட

    குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. வங்கிகள், தபால் நிலையங்கள், பொது சேவை மையங்கள் மூலம் இந்த சேவை முடுக்கிவிடவுள்ளது.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    இந்த பணிகள் அனைத்தும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிவடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆதார் திட்டத்தின் மூலம் அரசு திட்டங்கள் காஷ்மீர் மக்களுக்கு கிடைத்தால் அந்த யூனியன் பிரதேசம் வளர ஏதுவாக இருக்கும் என்பது மத்திய அரசின் நம்பிக்கையாகும்.

    English summary
    Centre is allegedly going to push Kashmir for Aadhaar enrolments to get benefits of Centre.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X