டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10%-க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு மாவட்டங்கள்- தமிழகம் உட்பட 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு அட்வைஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பாதிப்பு 10%-க்கும் அதிகமாக உள்ள மாவட்டங்களில் மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Centre Reviews Conraivurs cases Situation in 10 States including TN

இந்தியாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 41,499 ஆக பதிவாகி இருந்தது. கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக இருந்து வருகிறது.

இந்தியாவில் நேற்று மட்டும் 589 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வருவோர் எண்ணிக்கை குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.37%. ஆகவும் உள்ளது.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.29%. நாட்டின் வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5%க்கும் குறைவாக, 2.42%ஆக உள்ளது. தினசரி தொற்று உறுதி 5%க்கும் கீழ், 2.34%ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 46.64 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 10 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு நேற்று ஆலோசனை நடத்தியது.

மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிஷா, அஸ்ஸாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநில அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் கொவிட் மேலாண்மைக்காக சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த மாநிலங்களில் அன்றாட கொரோனா பாதிப்பு அல்லது தொற்று உறுதி விகிதம் அதிகரித்து வருகின்றது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவாவும் கூட்டத்தில் பங்கேற்றார்.‌ முதன்மைச் செயலாளர் (சுகாதாரம்), தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர், மாநிலங்களின் கண்காணிப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

தேசிய அளவிலான செரோ பரவல் ஆய்வு, பன்முகத்தன்மை கொண்டதாக இருப்பதால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து அதே நெறிமுறைகளைப் பின்பற்றி மாநிலங்களில் மாவட்ட அளவிலான நோய் பரவும் தரவுகளுக்காக தங்கள் மாநில அளவிலான செரோ ஆய்வை நடத்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் 10% கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தடம் அறிந்ததன் அடிப்படையில் கட்டுப்பாட்டு மண்டலங்களை நிர்ணயிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

தற்போதைய மருத்துவ உள்கட்டமைப்பை, குறிப்பாக ஊரகப் பகுதிகள் மற்றும் குழந்தைகளுக்கான பிரிவில் வசதிகளை அதிகப்படுத்துவதற்காக அவசரகால கொவிட்- 19 நடவடிக்கை தொகுப்பு நிதியை பயன்படுத்தி அதனை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்; இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்களின் படி உயிரிழப்புகளின் எண்ணிக்கையை பதிவு செய்ய வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது மத்திய அரசு.

அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,01,098 இந்தோனேசியாவில் 1,759 பேர் மரணம்அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,01,098 இந்தோனேசியாவில் 1,759 பேர் மரணம்

Recommended Video

    மீண்டும் அதிகரிக்கும் Corona பாதிப்பு.. Chennai Corporation எடுத்த அதிரடி நடவடிக்கை

    அத்துடன் 45 வயது முதல் 60 வயதுகுட்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை போடவேண்டும் எனவும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநில அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

    English summary
    Rajesh Bhushan, Union Health Secretary chaired a high-level meeting today to review the COVID-19 situation in 10 states of Kerala, Maharashtra, Karnataka, Tamil Nadu, Odisha, Assam, Mizoram, Meghalaya, Andhra Pradesh and Manipur on Saturday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X