டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெரும் பணக்காரர்களுக்கு 40% வரி? ஐஆர்எஸ் அதிகாரிகள் பரிந்துரை.. கடும் கோபம் அடைந்த மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: பெரும் பணக்காரர்களுக்கு கூடுதலாக 4 சதவீதம் கொரோனா நிவாரண வரி விதிப்பதன் மூலம் அரசு கூடுதலாக வருவாயைத் திரட்ட முடியும் என 50 இளம் வரி விதிப்பு அதிகாரிகள் பரிந்துரைந்துரைத்தனர். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ள மத்திய அரசு, ஒழுக்கக்கேடான செயல் என்றும், இப்படி ஒரு பரிந்துரையை அரசு கேட்கவில்லை என்றும், மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஃபோர்ஸ் என்ற தலைப்பில் (நிதி திரட்டும் ஆதார வழிகள் மற்றும் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை) 50 இளம் வருமான வரித்துறை அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஈடுகட்ட பல்வேறு பரிந்துரைகளை அறிவித்துள்ளனர்.

43 பக்க பரிந்துரையில் ஏராளமான திட்டங்கள் உள்ளன. அதில் பணக்காரர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு 40 சதவீத வரி விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தற்போதைய 30 சதவீதத்தை விட 10 சதவீதம் அதிகமாகும். அதிக நிகர மதிப்புள்ள வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி பொறுப்புக்கு மேல் மற்றும் அதற்கு மேல் வரி செலுத்த வேண்டியிருப்பதால், 40 சதவீத திட்டத்தின் படி அவர்களின் வரிச்சுமை 56 சதவீதத்திற்கு அருகில் இருக்கும். இதன் பொருள் அவர்கள் வருமானத்தில் பாதிக்கும் மேற்பட்டவற்றை வரிகளாக செலுத்த வேண்டியது இருக்கும்.

5 கோடிக்கு மேல் வருமானம்

5 கோடிக்கு மேல் வருமானம்

மேலும் அறிக்கையில், ரூ .5 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட நிகர மதிப்பு உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை செல்வ வரியாக விதிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர். இந்த இரண்டு வரி விதிப்பு மூலம் அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் கூடுதலாகக் கிடைக்கும்.

4 சதவீத கொரோனா வரி

4 சதவீத கொரோனா வரி

மேலும் ஆண்டுக்கு ரூ .10 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கும் தனிநபர்கள் மீது ஒரு முறை கட்டணம் வசூலிக்க 4 சதவீத 'கொரோனா நிவாரண வரி ' விதிக்கலாம் என்றும் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளனர். இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், ரூ .18,000 கோடி வரை அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பொறுப்பற்ற செயல்

பொறுப்பற்ற செயல்

இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. , ஐஆர்எஸ் அதிகாரிகளின் வரி அதிகரிப்பு அறிக்கை "பொறுப்பற்றது" என்றும், ஓழுக்ககேடா செயல் எனறும் கண்டித்துள்ளது. நிதி அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையி, "ஐ.ஆர்.எஸ். அசோசியேஷன் மூலம் ஒரு அதிகாரிகள் குழு, 'ஃபோர்ஸ்' என்ற தவறான அறிக்கையில் கோவிட் -19 தொற்றுநோயின் கடினமான நேரத்தில் வரிகளை அதிகரிப்பது குறித்த பரிந்துரைகளை வழங்கி உள்ளது . ஐஆர்எஸ் அசோசியேஷனின் ட்விட்டர் மற்றும் வலைத்தளம் மூலம் ஊடகங்களில் இது வெளியிடப்பட்டுள்ளது. இது சில அதிகாரிகளின் "பொறுப்பற்ற செயல்" ஆகும். ஐஆர்எஸ் சங்கத்திடமோ அல்லது அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த அதிகாரிகளின் குழுவிடமோ இந்த விஷயத்தில் எந்தவொரு அறிக்கையையும் கொடுக்குமாறு மத்திய அரசு கேட்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

விசாரணைக்கு உத்தரவு

ஐஆர்எஸ் அதிகாரிகளின் பரிந்துரைகளை முற்றிலும் மறுத்துள்ள மத்திய அரசு, "இதுபோன்ற ஒரு அறிக்கையைத் தயாரிப்பது அவர்களின் கடமையின் ஒரு பகுதி கூட அல்ல. இந்த செயல், ஒழுக்கமற்ற மற்றும் நடத்தை விதிகளை மீறும் செயலாகும். அதிகாரிகள் முன் அனுமதியையோ அல்லது அரசாங்கத்தின் அனுமதியையோ எடுக்காமல் உத்தியோகபூர்வ விஷயங்களில் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களுடன் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர் என்று கண்டித்துள்ளது. முன்னதாக ஐ.ஆர்.எஸ் சங்கத்தின் ட்விட்டர் பக்கத்தில் பரிந்துரைகள் வெளியானாதால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு உடனடியாக மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

English summary
Centre rushed in to junk a report by 50 Internal Revenue Service (IRS) officers that proposed increasing the tax burden on the rich, bringing in a wealth tax and charging an additional 4 per cent 'Covid Relief Cess'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X