டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து?.. குப்கர் கூட்டணி தலைவர்களுக்கு மத்திய அரசு உறுதி என தகவல்!

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் மத்திய உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு ரத்து அதிரடியாக ரத்து செய்தது. காஷ்மீரையும், லடாக்கையும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிந்த வழக்குகள் வாபஸ்.. மு.க. ஸ்டாலின் அதிரடி 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிந்த வழக்குகள் வாபஸ்.. மு.க. ஸ்டாலின் அதிரடி

காஷ்மீரின் எதிர்காலம் வளர்சி திட்டம் தொடர்பாகவும், அங்கு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்த காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து இருந்தது.

மோடி தலைமையில் ஆலோசனை

மோடி தலைமையில் ஆலோசனை

அதன்படி இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, இடதுசாரிகள் என ஆறு கட்சிகள் உள்ளடக்கிய 14 குப்கர் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீண்டும் கொடுக்க வேண்டும், காஷ்மீர் மக்களின் நில உரிமையை மதிக்க வேண்டும், அங்கு மாநில தேர்தல் நடத்த வேண்டும் என்று குப்கர் கூட்டணி தலைவர்கள் ஒருசேர பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தனர்.

உறுதியாக இருக்கிறோம்

உறுதியாக இருக்கிறோம்

அப்போது மத்திய அரசு ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து, பிரிவினைவாத அரசியல் தலைவர்களின் விடுதலை மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து பொறுமையுடன் கேட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் தாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று பிரதமர் குப்கர் கூட்டணி தலைவர்களிடம் உறுதி அளித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

 சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்

ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் தொகுதிகளை மறுசீரமைப்பதில் அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியதாக தெரிகிறது. காஷ்மீரில் டி.டி.சி தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதால் சட்டமன்றத் தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்படும் என்றும் பிரதமர் மோடி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர்

தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர்

தேர்தல்களுக்கான தொகுதிகளை மறுசீரமைக்கும் பணியில் தீவிரமாக பங்கேற்குமாறு தலைவர்களைக் பிரதமர் கேட்டுக் கொன்டவதாகவும், அதன்பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் கூறியதாகவும், குப்கர் கூட்டணி தலைவர்கள் இந்த யோசனையை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பின்னர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

இதுதான் மைல்கற்கள்

இதுதான் மைல்கற்கள்

ஜம்மு காஷ்மீரில் அனைத்து கட்ட வளர்ச்சியையும் உறுதி செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் வாக்குறுதியளித்தபடி தொகுதி மறுசீரமைப்பு செய்தல், அங்கு அமைதியான தேர்தல் நடத்தி முடித்தல் ஆகியவை முக்கியமான மைல்கற்கள் என்று ர் அமித்ஷா தெரிவித்தார்.

English summary
The decision was reportedly taken at a consultative meeting chaired by Prime Minister Modi on the Centre's commitment to grant statehood to Jammu and Kashmir
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X