டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓமிக்ரான்.. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எப்போது வேக்சின் போட வேண்டும்? முக்கிய தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எப்போது கொரோனா வேக்சின் போட்டுக்கொள்ளலாம் என்பது குறித்து மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Recommended Video

    Vaccine மூலம் கிடைக்கும் பலன்.. அதிகாரிகள் சொன்ன தகவல்

    இந்தியாவில் தற்போது கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுக்க தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இன்று ஒரே நாளில் மட்டும் 3.50 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 17% நெருங்கியுள்ளது.

    அவனியாபுரத்தில் ஆறுதல் பரிசு பெற மறுத்த இளம்பெண்.. கோவை ஜல்லிக்கட்டில் பெற்ற வெற்றி.. கலக்கிய காளைஅவனியாபுரத்தில் ஆறுதல் பரிசு பெற மறுத்த இளம்பெண்.. கோவை ஜல்லிக்கட்டில் பெற்ற வெற்றி.. கலக்கிய காளை

    வேக்சின் பணிகள்

    வேக்சின் பணிகள்

    தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. 2 டோஸ் கொரோனா வேக்சின் செலுத்தியவர்களுக்குத் தீவிர கொரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் மிகக் குறைவாகவே ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் விரைவாக வேக்சின் போட்டுக் கொள்ள வேண்டும் எனச் சுகாதார வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதைத் தாண்டிய இணை நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் பணிகளும் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பூஸ்டர் டோஸ்

    பூஸ்டர் டோஸ்

    தற்போது பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எப்போது கொரோனா வேக்சின் மற்றும் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம் என்பது பற்றி பொதுமக்களிடையே சந்தேகம் நிலவியது. இந்நிலையில் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல் எழுதியுள்ள இந்தக் கடிதத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எப்போது பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

    எப்போது

    எப்போது

    ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 3 மாதங்களுக்குப் பின்னரே கொரோனா வேக்சின் போட்டுக் கொள்ள வேண்டும் என்று விகாஸ் ஷீல் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனாவில் இருந்து குணமடைந்து 3 மாதங்களுக்குப் பின்னரே பூஸ்டர் டோசும் போட வேண்டும் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்ட ஆய்வு மற்றும் வேக்சின் பணிகளுக்கான வல்லுநர் குழு பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த ஜன. 10 முதல் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதைத் தாண்டிய இணை நோயாளிகளுக்கு வேக்சின் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2ஆவது டோஸ் செலுத்தப்பட்டு 39 வாரங்கள் அதாவது 9 மாதங்களுக்குப் பின்னரே 3ஆவது முன்னெச்சரிக்கை டோஸ் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Centre said that precaution doses for individuals will be deferred by three months after recovery. India Corona vaccination latest updates in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X