டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

4 மாநிலங்கள் ரொம்ப உஷாராக இருக்கனும்.. கொரோனா வேகமாக பரவுகிறது.. சுகாதாரத்துறை கடிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் கேஸ்கள் அதிகரித்திருப்பதை தடுக்க "கடுமையான விழிப்புணர்வு" மற்றும் "உடனடி நடவடிக்கை" தேவை என்பதை வலியுறுத்தி மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்காள அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நான்கு மாநிலங்களும் நாட்டில் செயலில் உள்ள கோவிட் கேஸ்களில் 59 சதவீதம் பங்களிப்பதாக சுகாதார செயலாளர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Centres Warning To 4 States As Covid Cases Rise

சோதனை விகிதங்கள் வீழ்ச்சியடைய கூடாது, தொடர்ந்து அதிக சோதனைகளை செய்ய வேண்டும் என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிற மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட 'டெஸ்ட்-ட்ராக்-ட்ரீட்' யுக்தியை தீவிரமாக செயல்படுத்தவும், முகமூடிகளை அணியவும், சமூக தூரத்தை பராமரிக்கவும், மற்ற அனைத்து தடுப்பு நடத்தைகளையும் பின்பற்றவும் மக்களை வலியுறுத்துமாறு பூஷண் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா.. முதல் இரு இடங்களில் சென்னை, கோவை மாவட்டங்கள்தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா.. முதல் இரு இடங்களில் சென்னை, கோவை மாவட்டங்கள்

"மகாராஷ்டிரா, கேரளா மற்றும் சத்தீஸ்கரில் சமீபத்தில் கொரோனா வைரஸ் கேஸ் திடீரென அதிகரித்திருப்பதைக் கண்டோம். இது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மறந்துவிடக் கூடாது என்பதற்கும், கோவிட் -19 க்கு எதிரான எங்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்பதற்கும் எச்சரிக்கையாகும்" என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

English summary
The Union Health Secretary wrote to the Maharashtra, Kerala, Chhattisgarh and Bengal governments on Thursday to underline the need for "strict vigil" and "prompt action" to arrest the recent spike in coronavirus cases .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X