டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ் செய்திகளில் மீடியாக்களுக்கு கட்டுப்பாடு.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு

Google Oneindia Tamil News

டெல்லி: அரசு வழங்கிய நெறிமுறையிலிருந்து, உண்மைகளை அறியாமல் எந்த ஊடக நிறுவனமும் கோவிட் -19 விஷயத்தில் எதையும் அச்சிடவோ, வெளியிடவோ, ஒளிபரப்பவோ கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் போலி செய்திகள் மிகப்பெரிய தடையாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில், இப்படி ஒரு உத்தரவு கோரப்பட்டது.

Centre seeks SC directive to media on publication of coronavirus related news

போலி செய்திகள், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தை கடினமாக்கியுள்ளது, தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இது மிகப்பெரிய தடையாக உள்ளது என்று, உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக உச்சநீதிமன்றம், நிபுணர்களின் குழுவையும் கொரோனா வைரஸ் குறித்த தகவல்களுக்கான போர்ட்டலையும் அமைக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு.. மகாராஷ்டிரா, கேரளாவையடுத்து 3வது இடம் பிடித்தது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு.. மகாராஷ்டிரா, கேரளாவையடுத்து 3வது இடம் பிடித்தது

கொரோனா வைரஸ் பிரச்சினையால், லாக்டவுன் செய்யப்பட்ட நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்குமாறு உத்தரவு கோரும் மனுவை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதில் மத்திய அரசு தரப்பில் வாதிட்ட, சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, மாநிலங்களுக்கு இடையே, இடம்பெயர்வதற்கு முழுமையான தடை உள்ளது என்று கூறினார்.

பீதி நிலையை சரி செய்ய அரசு ஆலோசித்து வருவதாகவும் துஷாக் மேத்தா கூறினார். மேலும் 22.88 லட்சம் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

English summary
The Centre has sought a direction from the Supreme Court that no media house should print, publish or telecast anything on COVID-19 without first ascertaining facts from the mechanism provided by the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X