டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடையாள போராட்டம் மட்டும் நடத்திவிட்டு மருத்துவ சேவைகளை தொடருங்கள்.. மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

Google Oneindia Tamil News

Recommended Video

    நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்... மருத்துவ சேவைகள் பாதிப்பு

    டெல்லி: நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன் அடையாள போராட்டங்களை நடத்திவிட்டு மருத்துவ சேவைகளை தொடருங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் ஒருவரை நோயாளியின் உறவினர் தாக்கிய விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தங்களுக்கு பாதுகாப்பு கோரி மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மருத்துவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    Centre supports Doctors Strkie?

    அகில இந்திய மருத்துவ கவுன்சில், இன்றைய நாளை போராட்ட நாளாக அறிவித்திருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டங்களால் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இதனிடையே இப்போராட்டம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மருத்துவர்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளிக்கிறேன். இந்த விவகாரத்தை மேற்கு வங்க முதல்வர் கவுரவ பிரச்சனையாக பார்க்கக் கூடாது.

    போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் பணிக்கு திரும்ப மமதா பானர்ஜி கெடு விதித்தது தவறு. அப்படி கெடுவிதித்ததால்தான் மருத்துவர்கள் கோபமடைந்துள்ளனர்.

    மே.வங்க விவகாரம்... நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்- மருத்துவ சேவைகள் கடும் பாதிப்பு மே.வங்க விவகாரம்... நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்- மருத்துவ சேவைகள் கடும் பாதிப்பு

    இது தொடர்பாக மமதா பானர்ஜிக்கு கடிதம் எழுத இருக்கிறேன். அவரிடம் தொலைபேசியிலும் பேச இருக்கிறேன். மருத்துவர்கள் அடையாள போராட்டங்களை நடத்திவிட்டு சேவைகளை தொடர வேண்டும்.

    இவ்வாறு ஹர்ஷ் வர்தன் கூறினார்.

    English summary
    Union Health Minister Dr Harsh Vardhan said that "I appeal to doctors to hold symbolic protests only and continue to carry out their duties".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X