டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குட்டு வைக்கும் தேர்தல் ஆணைய அதிகாரி லவசா, நீதிபதி சந்திரசூட்... பழிவாங்குமா மத்திய அரசு?

Google Oneindia Tamil News

Recommended Video

    ராஜீவ் காந்தி குறித்து மோடி விமர்சித்ததில் தவறில்லை: தேர்தல் ஆணையம் அதிரடி!- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து குட்டு வைத்து வரும் தேர்தல் ஆணையர்களில் ஒருவரான லவசா, நீதிபதி சந்திரசூட் இருவரையும் மத்திய அரசு பழிவாங்கக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.

    பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 6 புகார்கள் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டன. இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் மோடிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது

    Centre upsets over EC Lavasa, Justice Chandrachud

    ஆனால் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறினார் என 4 முறை மாறுபட்ட தீர்ப்பை அளித்தவர் அசோக் லவசா. அதேபோல் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் தேர்தல் நடத்தை விதிகளை மீறினார் என தீர்ப்பளித்தவர் அசோக் லவசா. இந்த அசோக் லவசாதான் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக வாய்ப்புள்ளவர்.

    இதேபோல் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், அடுத்த தலைமை நீதிபதியாகக் கூடியவர். ஆனால் சந்திரசூட் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்புகளை வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு ஆதார் சட்ட மசோதாவை நிதி மசோதாவாக மத்திய அரசு தாக்கல் செய்ததை ஒரு மோசடி என தீர்ப்பளித்திருந்தார் சந்திரசூட்.

    2 வருடத்தில் 25 குழந்தைகளை விற்றேன்.. ராசிபுரம் அமுதா பரபரப்பு தகவல்.. கொல்லிமலையில் விசாரணை தீவிரம்2 வருடத்தில் 25 குழந்தைகளை விற்றேன்.. ராசிபுரம் அமுதா பரபரப்பு தகவல்.. கொல்லிமலையில் விசாரணை தீவிரம்

    அண்மையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான பாலியல் புகார் விவகாரத்தை நீதிபதி பாப்டே விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் நீதிபதி சந்திரசூட் தலையிட்டதாக சர்ச்சை வெடித்தது. பின்னர் உச்சநீதிமன்றமே நீதிபதிகள் யாரும் தலையிடவில்லை என விளக்கம் அளித்திருந்தது.

    இப்படி மோதல் போக்கை கடைபிடிக்கும் தேர்தல் ஆணைய அதிகாரி லவசா, நீதிபதி சந்திரசூட் இருவர் மீதும் மத்திய அரசு கடும் அதிருப்தியில் இருக்கிறது. இதனால் இருவருக்குமான பதவி உயர்வு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    English summary
    The centre govt upset over the Election Commissioner Ashok Lavasa and Supreme Court judge Justice D.Y. Chandrachud.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X