டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தனியாளாக 95% எதிர்கட்சிகளை ஒன்றுதிரட்டிய சந்திரபாபு நாயுடு.. பாஜகவின் சிம்ம சொப்பனமானார்!

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் வகையில் 95 சதவிகித எதிர்கட்சிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒன்று திரட்டி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் ஸ்டாலினுடன் சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு!- வீடியோ

    டெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் வகையில் 95 சதவிகித எதிர்கட்சிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒன்று திரட்டி இருக்கிறார்.

    அகண்ட பாரத கனவில் உழன்று கொண்டு இருக்கும் பாஜகவிற்கு தென்னிந்தியாவில் இருந்து சிம்ம சொப்பனம் ஒன்றும் தோன்றி இருக்கிறது. பாஜக கனவில் கூட நினைத்து பார்க்காத மிகப்பெரிய கூட்டணியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவாக்கி வருகிறார்.

    தொட்டதெல்லாம் வெற்றி என்ற பாதையில் செல்லும் சந்திரபாபு நாயுடு தற்போது களமிறங்கி இருப்பது நாடாளுமன்ற தேர்தலுக்காக. இந்தியா அரசியல் வரலாறு இதுவரை நினைத்து பார்க்காத பெரிய கூட்டணி உருவாவதற்கான எல்லா அறிகுறியும் தற்போது தோன்றியுள்ளது.

    சர்கார் விவகாரம்.. அஜித் ரசிகர்களை மேற்கோள் காட்டிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்! சர்கார் விவகாரம்.. அஜித் ரசிகர்களை மேற்கோள் காட்டிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    எத்தனை தலைவர்களை சந்தித்தார்

    எத்தனை தலைவர்களை சந்தித்தார்

    இந்த கூட்டணி குறித்து மாநில கட்சிகள் பல மாதம் முன்பே யோசித்து இருந்தாலும், சென்ற வாரம்தான் இந்த கூட்டணிக்கான மிகப்பெரிய அஸ்திவாரம் போடப்பட்டது. பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டும் வகையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் என்று பல கட்சி தலைவர்களை சென்று சந்திரபாபு நாயுடு பார்த்தார். கடந்த வாரம் ஒரே நாளில் இத்தனை கட்சிகளை அவர் நேரில் சென்று பார்த்து அழைப்பு விடுத்தார்.

     இன்னும் சில தலைவர்கள்

    இன்னும் சில தலைவர்கள்

    இந்த நிலையில் நேற்று சந்திரபாபு நாயுடு புதிய திருப்பமாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்தார். மேலும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்டி தேவகவுடாவையும் சந்தித்தார். இதுதான் மிக முக்கிய திருப்பமாக இதில் பார்க்கப்பட்டது. அதன்படி நேற்றே தேவகவுடா, நாடாளுமன்ற தேர்தலுக்கு பெரிய கூட்டணி அமைவது உறுதி, தேர்தலுக்கு பின் யார் பிரதமர் என்று அறிவிப்போம் என்று கூறினார்.

    இன்று தமிழகம்

    இன்று தமிழகம்

    இந்த நிலையில்தான் இன்று தமிழகம் வருகிறார் சந்திரபாபு நாயுடு. தமிழகத்தில் திமுக தலைவர்களை சென்று சந்திக்க இருக்கிறார். இதில் கூட்டணி குறித்து பேச முடிவெடுத்துள்ளார். சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து இருப்பதாக நேற்றே ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார். இதனால் திமுக இந்த கூட்டணியில் சேர்வது உறுதியாகி உள்ளது.

    95 சதவிகிதம்

    95 சதவிகிதம்

    இதன் மூலம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கிட்டத்தட்ட 95 சதவிகித எதிர்கட்சிகளை பாஜகவிற்கு எதிராக ஒன்றுதிரட்டிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, இரண்டு இடதுசாரி கட்சிகள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, முஸ்லீம் லீக், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் என்று மாநிலங்களின் முக்கிய கட்சிகளை எல்லாம் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார்.

    பாஜக கடும் அதிர்ச்சி

    பாஜக கடும் அதிர்ச்சி

    இது பாஜகவின் 2019 கனவில் சுடுதண்ணீரை ஊற்றி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். இதுவரை எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு எதிராக பாஜக எந்த தேர்தலிலும் வென்றதே கிடையாது. அது தற்போது நாடாளுமன்ற தேர்தலிலும் நடந்து விடுமோ என்று பாஜக பயப்படுகிறது. பாஜகவின் அரசியல் திட்டங்களுக்கு எதிரான சந்திரபாபு நாயுடுவின் முதல் வெற்றியும் இந்த பயம்தான்.

    English summary
    Chandrababu Naidu literally made 95% of opponents together against BJP for 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X