டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு.. அனைவரும் ஒன்றிணைய அழைப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார். சந்திரபாபு நாயுடுவிற்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். காங்கிரஸுடன் தெலுங்கு தேசம் கூட்டணி குறித்து பேசுவது இதுவே முதல் முறை

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை தெலுங்குதேச கட்சித்தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு நிரூபித்துள்ளார். கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்து காங்கிரஸை எதிர்த்த சந்திரபாபு நாயுடு தற்போது காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். அதில், முக்கிய நகர்வாக டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார். பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.

சந்திரபாபு நாயுடுவின் இந்த நகர்வு நீண்டகால நட்புகட்சியான பாரதிய ஜனதாவுக்கு நெருக்கடியை உண்டாக்குமோ இல்லையோ, தெலுங்கானா ராஸ்டிரிய சமிதி கட்சிக்கு நிச்சயம் நெருக்கடியை உண்டாக்கும். ஏனென்றால், கடந்த தேர்தலின் போதும் தேர்தலுக்குப்பின்னும், தேசிய அளவில், பாரதிய ஜனதாவுக்கு எதிரான மேடைகளில், காங்கிரஸ் உடன், தெலுங்கானா முதலமைச்சரும், தெலுங்கானா ராஸ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திர சேகர ராவ் கைகோர்த்து நின்றார்.

என் கல்யாணத்தை கமல் அப்பா நடத்தி வைக்க போகிறார்.. துள்ளி குதிக்கும் சுஜா என் கல்யாணத்தை கமல் அப்பா நடத்தி வைக்க போகிறார்.. துள்ளி குதிக்கும் சுஜா

மாறிப்போன நிலைமை

மாறிப்போன நிலைமை

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தற்போது அந்த இடத்தை சந்திர பாபு நாயுடு பிடிக்க திட்டமிட்டுள்ளார். ராகுல்- சந்திரபாபு ஆகியோரின் இன்றைய சந்திப்பு, தேசிய அளவில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளை இணைக்கும் நகர்வாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு

கடந்த சனிக்கிழமையன்று மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத் யாதவ் ஆகியோரை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார். இதன் அடுத்த கட்டமாக, சரத் பவார், ஃபருக் அப்துல்லா ஆகியோரை சந்திரபாபு இன்று டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, நாட்டை காப்பாற்றவே டெல்லியில் தலைவர்களுடனான சந்திப்பு நடக்கிறது என்றார்.

 அதிரடி சந்திரபாபு நாயுடு

அதிரடி சந்திரபாபு நாயுடு

வாக்குறுதி அளித்தபடி, ஆந்திரா தனி மாநிலமாக அறிவித்த பிறகு, சிறப்பு நிதி அளிக்கவில்லை என்று பாஜகவுடனான கூட்டணியை தெலுங்குதேசம் கட்சி சில மாதங்களுக்கு முன்பு முறித்துக் கொண்டது. ஆனால், அப்போதே காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்கும் திட்டம் அக்கட்சிக்கு இருந்ததோ இல்லை ஆனால், இப்போது கூட்டணி அமைக்க புயல்வேகத்தில் சந்திரபாபு நாயுடு செயல்படுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

காங்கிரஸ் கட்சியில் தொடங்கிய அரசியல் பயணம்

காங்கிரஸ் கட்சியில் தொடங்கிய அரசியல் பயணம்

2019 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க புதிய கூட்டணியை சந்திரபாபு நாயுடு முன்னெடுத்து வருவதன் எதிரொலியாகவே ராகுலுடனான இந்த சந்திப்பு நடப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்எல்ஏவாக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய சந்திரபாபு நாயுடு என்.டி.ராமாராவின் மகளை திருமணம் செய்த பின்னர் தெலுங்குதேசம் கட்சியில் இணைந்தார். இப்போது மீண்டும் அரசியல் வாய்ப்பு தந்த கட்சியுடனே கூட்டணி அமைக்க முயற்சிகளை எடுத்து வருகிறார்.

English summary
Andhra Pradesh chief minister N Chandrababu Naidu will meet Congress president Rahul Gandhi in Delhi on Wednesday,the move indicates that the Telugu Desam Party would join the national opposition front forming against the BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X