டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல், மாயாவதி, அகிலேஷ், மமதா.. 48 மணி நேரத்தில் 21 தலைவர்களை சந்திக்கும் சந்திரபாபு.. பரபர திட்டம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ராகுலை மீண்டும் சந்தித்த சந்திரபாபு... சோனியாவையும் சந்திக்கிறார் ?

    லி: இந்திய அரசியல் வரலாற்றில் யாரும் செய்யாத ஒரு விஷயத்தை ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்து கொண்டு இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.

    லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 4 நாட்கள்தான் இருக்கிறது. வரும் வியாழக்கிழமை இந்நேரம் இந்தியாவின் பிரதமர் யார் என்பது தெரிந்துவிடும். இந்த ஒரு நாளுக்காகத்தான் எல்லா கட்சிகளும், மக்களும் காத்து இருந்தனர்.

    Chandrababu Naidu on his utmost busy schedule to remove Modi from the chair

    லோக்சபா தேர்தலில் இரண்டு பெரிய தேசிய கட்சிகளின் கூட்டணியான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டும் பெரும்பான்மை பெறாது என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாநில கட்சிகள் ஆதரவு அளிக்கும் நபர்களே ஆட்சி அமைக்க முடியும்.

    அதன்படி மாநில தலைவர்களான ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, திமுக தலைவர் ஸ்டாலின், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், பிஜு பட்நாயக், சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    இவர்கள் எல்லோரையும் அவெஞ்சர்ஸ் போல ஒன்றிணைக்கும் முயற்சியில் இருக்கிறார் சந்திரபாபு நாயுடு. மொத்தம் 21 கட்சிகளை இதற்காக அவர் தேடி தேடி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். லோக்சபா தேர்தலுக்கு முன்பே இவர்களை சந்தித்து அவர் பேசினார்.

     அன்று காங்கிரஸை அப்படியெல்லாம் கடுமையாக விமர்சித்த நாயுடுவுக்கு.. இன்று இப்படி ஒரு நிலை அன்று காங்கிரஸை அப்படியெல்லாம் கடுமையாக விமர்சித்த நாயுடுவுக்கு.. இன்று இப்படி ஒரு நிலை

    தேர்தல் முடிவுகள் நெருங்க உள்ள நிலையில், தற்போது அவர் வரிசையாக தலைவர்களை சந்தித்து வருகிறார். இவரது வாழ்க்கையில் கடந்த 24 மணி நேரமும், அடுத்த 24 மணி நேரமும் மிக முக்கியமான நிமிடங்களாக பார்க்கப்படுகிறது. ஆம், இந்த 48 மணி நேரத்தில் அவர் மிக முக்கியமான அரசியல்வாதிகளை சந்தித்து இருக்கிறார். இன்னும் சந்திக்க உள்ளார். இதன் நீண்ட பட்டியல் இதோ:

    • நேற்று காலை சந்திரபாபு நாயுடு சிபிஐ கட்சியை சேர்ந்த சுதாகர் ரெட்டியை சந்தித்தார். இதில்தான் சந்திப்பு பயணம் தொடங்கியது.
    • அதன்பின் நேரடியாக ராகுல் காந்தி இல்லம் சென்று அவரை சந்தித்தார். இவர்கள் 45 நிமிடம் பேசினார்கள்.
    • அதன்பின் மஹாராஷ்டிரா பறந்து சென்ற இவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்தார்.
    • பின் உடனே சில மணி நேரத்தில் எல்ஜேடி மூத்த தலைவர் சரத் யாதவை சந்தித்தார்.
    • அதன்பின் 4 மணிக்கு உத்தர பிரதேசம் சென்றவர் லக்னோவில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தார்.
    • பின் 6 மணிக்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை சந்தித்தார். இந்த சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்தது.
    • அதன்பின் மீண்டும் சரத் பவாரை முக்கிய விஷயம் பேசுவதற்காக சந்தித்தார்.
    • பின் இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். உத்தர பிரதேச சந்திப்பு குறித்து ராகுலிடம் விளக்கினார்.
    • பின் மீண்டும் சிபிஐ பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சுரியை சந்தித்தார்.
    • அதன்பின் இன்று மாலை சோனியா காந்தியை சந்திக்க உள்ளார்.

    இந்த நிலையில் இன்று மாலைக்கு பின் சந்திரபாபு நாயுடு மமதா பானர்ஜியை இரவு சந்திக்க உள்ளார்.

    நாளை திமுக தலைவர் ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சந்திப்பார் என்கிறார்கள். ராகுலிடம் தொடங்கிய சந்திப்பு ஸ்டாலினுடன் முடியும் என்று கூறுகிறார்கள்.

    இந்த சந்திப்பு முழுக்க மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று குறிக்கோளுடன் தான் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் பலன் எப்படி இருக்கும் என்று வரும் வியாழன் அன்று தெரிந்துவிடும்.

    English summary
    48 hrs plan: Chandrababu Naidu on his utmost busy schedule to remove Modi from the chair.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X