டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம்மொழி தமிழாய்வு மைய முதல் இயக்குநராக சந்திரசேகரன்- மத்திய அமைச்சர் ட்வீட்டில் ரஜினிக்கு டேக்

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மையத்தின் முதல் இயக்குநராக ஆர். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலின் ட்வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் டேக் செய்யப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.

செம்மொழித் தமிழாய்வு மையத்தின் இயக்குநர் பதவி நீண்டகாலம் நிரப்பப்படாமலே இருந்தது. இந்த பதவியை உடனே நிரப்ப வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தினர்.

நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவிட்டுள்ளார்.

மிக அருகே வந்தது.. உளவு பார்க்க வந்த சீனாவின் J-11, J-7 போர் விமானங்கள்.. லடாக்கில் பெரும் பதற்றம்!மிக அருகே வந்தது.. உளவு பார்க்க வந்த சீனாவின் J-11, J-7 போர் விமானங்கள்.. லடாக்கில் பெரும் பதற்றம்!

இயக்குநர் நியமனம்

இயக்குநர் நியமனம்

அந்த பதிவில், செம்மொழி தமிழாய்வு மைய முதல் இயக்குநராக ஆர். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மொழியை மேம்படுத்துவதற்கான எங்கள் நடவடிக்கையை இது வெளிப்படுத்துகிறது என அதில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் இல்லாமல் தமது ட்விட்டர் பதிவை டேக் செய்திருக்கிறார்.

டேக் செய்த அமைச்சர்

டேக் செய்த அமைச்சர்

மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமது ட்வீட் பதிவை, @narendramodi @AmitShah @CMOTamilNadu ஆகியோருக்கு ட்வீட் செய்திருக்கிறார். அத்துடன் நடிகர் ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கமான @rajinikanth-க்கும் ரமேஷ் பொக்ரியால் ட்வீட் செய்திருக்கிறார்.

ரஜினிகாந்துக்கும் டேக்

ரஜினிகாந்துக்கும் டேக்

நடிகர் ரஜினிகாந்துக்கு ரமேஷ் பொக்ரியால் ட்வீட் செய்திருப்பதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. மத்திய- மாநில அரசுகள் தொடர்பான ஒரு பதிவில் நடிகர் ரஜினிகாந்த் எதற்காக டேக் செய்யப்பட வேண்டும் என்பது நெட்டிசன்கள் கேள்வி. தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பதில் ரஜினிகாந்த் டேக் செய்யப்பட்டுவிட்டாரோ? என்பதும் நெட்டிசன்கள் சந்தேகம்.

நெட்டிசன்களிடையே விவாதம்

நெட்டிசன்களிடையே விவாதம்

செல்வன் 🅂🄴🄻🅅🄰🄽‍ @selvanz என்ற பதிவர், ரஜினிகாந்த் யார்? அரசு பொறுப்புகளில் ஏதேனும் இருக்கிறாரா ரஜினிகாந்த்? எதற்காக அரசு தொடர்பான ட்வீட்டுகளில் ரஜினிகாந்த் டேக் செய்யப்பட்டார்? என கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு @NVandhiyadhevan என்பவர் பதில் கொடுத்திருக்கிறார். அதில், ரஜினிகாந்த் தமிழகத்தின் அடையாளம்; இதனை தயவு செய்து புரிந்து கொள்ளவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Prof. R. Chandrasekharan has been appointed as the first Director of the Central Institute of Classical Tamil (CICT)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X