டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

20 நிமிடத்தில் நடந்த மாற்றம்.. நிலவை மேலும் நெருங்கிய சந்திரயான் 2.. சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டது

இன்று காலை சந்திரயான் 2 வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டது.

Google Oneindia Tamil News

டெல்லி: இன்று காலை சந்திரயான் 2 வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டது. தற்போது சந்திரயான் 2 நிலவை மிகவும் நெருக்கமாக சுற்றி வருகிறது.

சந்திரயான் 2 தற்போது நிலவை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது. சந்திரயான் 2 கடந்த மாதம் 22ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயான் 2 பூமியில் இருந்து செலுத்தப்பட்டதில் இருந்து நிலவை அடையும் வரை மொத்தம் 48 நாட்கள் மிக நீண்ட பயணம் மேற்கொள்ளும். இதில் ஏற்கனவே 30 நாட்கள் பயணம் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி செலுத்தப்பட்டது

எப்படி செலுத்தப்பட்டது

இந்த சந்திரயான் 2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. முதலில் இது பூமியை சுற்றி வந்தது. பூமியை நீள்வட்ட பாதையில் எதிர்திசையில் சுற்றுவதன் மூலம் சந்திரயான் 2 வேகம் அதிகரிக்கப்பட்டது. பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2 விலகி சென்று கடந்த வாரம் பூமியின் வட்டப்பாதையில் இருந்து வெளியேறியது..

நிலவு வட்டப்பாதை

நிலவு வட்டப்பாதை

இந்த நிலையில் நேற்று வெற்றிகரமாக சந்திரயான் 2 நிலவின் வட்டப்பாதையை அடைந்தது. நிலவை சந்திரயான் 2 கடிகார திசையில் சுற்றி வருகிறது. இதன் மூலம் நிலவிற்கு அருகில் சென்று அதன் வேகத்தை குறைக்க முடியும். அதேபோல் சரியாக நிலவிற்கு அருகில் சென்று தென் துருவத்தில் இறங்க முடியும். இதன் மூலம் நிலவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக அருகில் சந்திரயான் 2 செல்லும்.

எப்படி குறைப்பு

எப்படி குறைப்பு

நிலவின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி, நீள்வட்ட பாதையில் சுற்றுவதால் சந்திரயான் 2 நிலவிற்கு அருகில் கொஞ்சம் கொஞ்சமாக சென்று வட்டப்பாதையை அடையும். அதன் ஒரு படியாக இன்று காலை சந்திரயான் 2 வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டது. இதற்காக 20 நிமிடம் எஞ்சின் இயக்கப்பட்டது. அதன்படி தற்போது நிலவை நீளவட்ட பாதையில் 118 கிமீ x 4412 கிமீ தொலைவில் சந்திரயான் 2 சுற்றி வருகிறது.

முன்பு எப்படி

முன்பு எப்படி

முன்பை விட சந்திரயான் 2 நிலவை மிகவும் நெருக்கமாக சுற்றி வருகிறது. இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக இதன் வட்டப்பாதை குறைக்கப்பட்டு வரும் செப்டம்பர் 7ம் தேதி சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும். சந்திரயான் 2ல் இருந்து செப்டம்பர் 7ம் தேதி சரியாக விக்ரம் லேண்டரில் உள்ள பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆராய்ச்சிகளை செய்யும்.

English summary
Chandrayaan-2 lowers orbit course around Moon successfully.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X