டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட சந்திராயன் -2 நாளை மதியம் ஏவப்பட்ட இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட சந்திராயன் -2 நாளை மதியம் ஏவப்பட்ட இருக்கிறது. இதற்கான கவுண்டவுன் இன்று தொடங்குகிறது.

நிலவின் தென் துருவத்தில் என்ன இருக்கிறது? இந்த ஒரு கேள்விதான் சந்திராயன் -2 திட்டம் தொடங்குவதற்கு காரணமாக அமைந்தது. சந்திராயன் -1 திட்டம் வெற்றிகரமாக நிலவின் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டது.

நிலவில் தண்ணீர் இருப்பதையும் கூட சந்திராயன் 1 தான் கண்டுபிடித்தது. அதன்பின்பே நாசா அதை உறுதி செய்தது. இந்த நிலையில்தான் சந்திராயன் -2 நிலவின் தென் பகுதியை குறி வைத்து இருக்கிறது.

செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

நிலவின் தென் பகுதியில் என்ன இருக்கிறது. அதன் இருளான இடங்களில் என்ன காணப்படுகிறது. அங்கு தண்ணீர் இருக்குமா என்பதுதான் சந்திராயன் -2 திட்டத்தின் குறிக்கோள் ஆகும். இதுவரை உலகில் எந்த ஒரு நாடும் நிலவின் தென் பகுதியை குறி வைத்தது கிடையாது.

இந்தியா முதல்முறை

இந்தியா முதல்முறை

இந்த நிலையில் இந்தியாதான் முதல்முறையாக தற்போது தென் துருவ பகுதிக்கு இந்தியா சந்திராயன் -2வை அனுப்புகிறது. இதில் மூன்று முக்கியமான கருவிகள் அடங்கி உள்ளது. அதன்படி ஆர்பிட்டர் எனப்படும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் சாட்டிலைட் போன்ற கருவி ஒன்று.

இன்னும் இரண்டு

இன்னும் இரண்டு

மேலும் நிலவில் இறங்கி அதை சோதனை செய்யும் பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர் ஒன்று. இந்த ரோவரை தரையிறக்க உதவும் விக்ரம் என்ற லேண்டர் கருவி ஒன்று. ஆகிய மூன்று முக்கிய சாதனங்களை சந்திராயன் -2 சுமந்து செல்கிறது. இந்தியா முதல்முறை இப்படி ரோவர் அனுப்புவது குறிப்பிடத்தக்கது.

பிரச்சனை ஆனது

பிரச்சனை ஆனது

சந்திராயன் -2 கடந்த வாரம் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. கடந்த வாரம் திங்கள் கிழமை அதிகாலை 3 மணிக்கு ஏவப்பட்ட வேண்டிய சந்திராயன் -2 தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக சந்திராயன் -2 விண்ணில் ஏவப்படவில்லை.

சரி செய்யப்பட்டது

சரி செய்யப்பட்டது

இந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனை எல்லாம் சரி செய்யப்பட்டு இருக்கிறது. சந்திராயன் -2ல் எரிபொருள் கசிவு சரி செய்யப்பட்டதை அடுத்து கடைசி கட்ட சோதனை மட்டும் நடந்து வருகிறது. இந்த கடைசி கட்ட சோதனைகள் முடிந்த பின் நாளை சந்திராயன் -2 விண்ணில் ஏவப்படும்.

இன்று மாலை

இன்று மாலை

நாளை சந்திராயன் -2 ஏவப்பட உள்ள நிலையில் இன்று மாலை இதன் கவுண்டவுன் மீண்டும் தொடங்குகிறது. நாளை மதியம் 2.43 மணிக்கு சந்திராயன் -2 ஏவப்படும். செப்டம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் இதன் பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கும்.

English summary
Chandrayaan-2 mission launch rehearsal completed, everything goes good, says ISRO.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X