டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1 வாரம் டைம்.. நாசா நினைத்தால் அது நடக்கும்.. ஆனால்.. சந்திரயான் 2ல் அடுத்து இதுதான் நிகழும்!

சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் எங்கே சென்றது என்று தேடும் பணி தற்போது தொடங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சந்திரயான் 2ல் உள்ள லேண்டர் விக்ரம் உடன் தொடர்பு துண்டிப்பு

    டெல்லி: சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் எங்கே சென்றது என்று தேடும் பணி தற்போது தொடங்கி உள்ளது. விக்ரம் லேண்டர் உடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் என்று நினைத்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம்தான் மிச்சமாகி உள்ளது. ஆம், சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கவில்லை.

    மாறாக நிலவிற்கு மிக அருகில் 2.1 கிமீ தூரம் வரை விக்ரம் லேண்டர் சென்றது. அதன்பின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் எங்கே சென்றது என்று தெரியவில்லை.

    1.54 மணிக்கு நடந்த அந்த விஷயம்.. சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் மாயமானது எப்படி.. இதுதான் நடந்தது!1.54 மணிக்கு நடந்த அந்த விஷயம்.. சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் மாயமானது எப்படி.. இதுதான் நடந்தது!

    எப்படி இணைப்பு

    எப்படி இணைப்பு

    சந்திரயான் 2ல் இனி பின்வரும் விஷயங்கள் நடக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று இரவு 1.48 மணிக்கு சந்திரயான் 2ன் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. அதே சமயம் லேண்டருடன் தொடர்பை இழந்தாலும் ஆர்பிட்டர் இன்னமும் இஸ்ரோ உடன் தொடர்பில்தான் இருக்கிறது. இந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை ஆராயும்.

    என்ன செய்வார்கள்

    என்ன செய்வார்கள்

    முதற்கட்டமாக விக்ரம் உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இஸ்ரோ தீவிரமாக முயன்று வருகிறது. விக்ரம் லேண்டர் உடன் இப்போதும் கூட தொடர்பை ஏற்படுத்த முடியும் என்று இஸ்ரோ கூறுகிறது. அதனால் விக்ரம் லேண்டரை நோக்கி தற்போது சிக்னல்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    என்ன ஆர்பிட்டர்

    என்ன ஆர்பிட்டர்

    ஆர்பிட்டர் இன்னமும் இஸ்ரோ உடன் தொடர்பில்தான் இருக்கிறது. இது நிலவின் தென் பகுதியைத்தான் சுற்றி வருகிறது. அதனால் நிலவின் தென் பகுதிக்கு மேல் ஆர்பிட்டர் செல்லும் போது அது நிலவை புகைப்படம் எடுக்கும். அப்போது விக்ரம் லேண்டர் எங்கே சென்றது என்று தெரிய வரும். விக்ரம் லேண்டருக்கு என்ன ஆனது என்ற உண்மை ஆர்பிட்டர் தெரிய வரும்.

    நாசா

    நாசா

    இதில் இன்னொரு மிக முக்கியமான விஷயமும் இருக்கிறது. அதன்படி, விக்ரம் லேண்டர் உடன் நாசா அனுப்பிய சில லேசர் கருவிகளும் இருந்தது. இதனால் இந்த மிஷன் நாசாவிற்கு மிக முக்கியமான மிஷன் ஆகும். ஆகவே நாசாவும் விக்ரமை தேட முடிவு செய்துள்ளது.

    நாசா எப்படி இறங்கும்

    நாசா எப்படி இறங்கும்

    நாசாவின் சில சாட்டிலைட்டுகள் ஏற்கனவே நிலவை சுற்றி வருகிறது. அதில் சில சாட்டிலைட்டுகள் நிலவை தென் பகுதிக்கு மேலாக சுற்றி வருகிறது.இன்னும் சில நாட்களில் அது விக்ரம் லேண்டர் இறங்க வேண்டிய இடத்திற்கு மேலாக செல்லும். அப்போது அந்த பகுதியை நாசா படம் பிடிக்க உள்ளது.

    என்ன அனுப்பும்

    என்ன அனுப்பும்

    அதனால் 1 வாரத்திற்குள் விக்ரம் லேண்டருக்கு என்ன ஆனது என்று நாசா கண்டுபிடித்து கூறிவிடும். ஆனால் அதற்கு அவசியம் கிடையாது, அதற்கு முன்பாகவே இஸ்ரோவின் ஆர்பிட்டர் விக்ரம் எங்கே என்று கூறிவிடும் என்று கூறுகிறார்கள். இதனால் சந்திரயான் 2ல் அடுத்து என்ன நடக்கும் என்று கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Chandrayaan 2: NASA satellite may come to rescue Vikram Lander in a week .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X