டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உற்சாகத்தில் இஸ்ரோ.. நிலவில் மாஸ் கண்டுபிடிப்பை நிகழ்த்திய சந்திரயான் 2.. அசத்தும் ஆர்பிட்டர்!

நிலவில் வளிமண்டலத்தில் சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தி சாதனை படைத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Chandrayaan-2 finds easily detectable ‘Argon-40’ isotope

    டெல்லி: நிலவில் வளிமண்டலத்தில் சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தி சாதனை படைத்து இருக்கிறது.

    கடந்த செப்டம்பர் மாதம் சந்திரயான் 2 ஆர்பிட்டர் நிலவின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஆனால் சந்திராயன் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. நிலவில் இறங்கும் நேரத்தில் சரியாக அதிகாலை 1.48 மணிக்கு, நிலவில் இருந்து 2.1 கிமீ தூரத்தில் சந்திரயான் 2ன் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது.

    இப்போது வரை அதை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

    அமித் ஷாவின் முயற்சிக்கு பலன் இல்லை.. முரண்டு பிடிக்கும் உத்தவ் தாக்கரே.. சிவசேனா புது பாய்ச்சல்!அமித் ஷாவின் முயற்சிக்கு பலன் இல்லை.. முரண்டு பிடிக்கும் உத்தவ் தாக்கரே.. சிவசேனா புது பாய்ச்சல்!

    தொடர்கிறது

    தொடர்கிறது

    சந்திரயான் 2ல் இருக்கும் லேண்டர் தோல்வி அடைந்துவிட்டால் ஆர்பிட்டர் இன்னும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் சாட்டிலைட் போன்ற கருவி ஆகும். இது நிலவின் வட்டப்பாதையை ஏற்கனவே சுற்றி வர தொடங்கிவிட்டது.

    என்ன கண்டுபிடிப்பு

    என்ன கண்டுபிடிப்பு

    இந்த நிலையில் இந்த ஆர்பிட்டரில் இருக்கும் சந்திரா அட்மாஸ்பிரிக் காம்போசிஷன் எக்ஸ்புளோரர் 2 (Chandra's Atmospheric Composition Explorer-2 -- CHACE-2) எனப்படும் சேஸ் 2 புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தி இருக்கிறது. இந்த சேஸ் 2 என்பது நிலவின் வளிமண்டத்தில் இருக்கும் வாயுக்களை கண்டுபிடிக்கும் சென்சார் ஆகும்.

    துல்லியமும்

    துல்லியமும்

    நிலவில் வளிமண்டலத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும் வாயுக்களை வகை வகையாக பிரித்து மிக துல்லியமாக இது கண்டுபிடிக்கும். எந்த அளவிற்கு வாயுக்கள் இருக்கிறது. அது எப்படி உருவாகிறது என்பதையும் சேஸ் 2 துல்லியமாக கண்டுபிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆர்கான் 40

    ஆர்கான் 40

    அதன்படி நிலவின் வளிமண்டலத்தில் ஆர்கான் 40 இருப்பதாக சேஸ் 2 கண்டுபிடித்துள்ளது. இது நிலவின் வளிமண்டலத்தில் அதிகம் இருக்கிறது. நிலவின் அடியில் அணுக்கதிர் வீச்சை வெளியிடும் பாறைகள் இருக்கிறது. இந்த பாறைகளில் இருந்துதான் ஆர்கான் 40 வாயு வெளியாகிறது என்று சேஸ் 2 கண்டுபிடித்துள்ளது.

    உறுதி

    உறுதி

    நிலவில் உள்ள கற்களில் ஆர்கான் 40 இருப்பதை நாசா ஏற்கனவே கண்டுபிடித்து இருந்தது. தற்போது அங்கு வளிமண்டலத்திலும் ஆர்கான் 40 இருப்பதை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது. அதோடு ஆர்கான் 40 வாயு மிக அதிக அளவில் நிலவில் இருப்பதாக சந்திரயான் 2ன் சேஸ் 2 கருவி கண்டுபிடிப்பித்துள்ளது.

    English summary
    Chandrayaan 2: Orbiter's in build sensor named CHACE - 2 Detects Argon-40 above Moon’s Surface yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X