டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்களுடன் இருப்பேன்.. இக்கட்டான சூழ்நிலையை சிறப்பாக எதிர்கொண்ட மோடி.. இதை கவனித்தீர்களா?

சந்திரயான் 2வை நிலவில் தரையிறக்குவதில் ஏற்பட்ட சறுக்கலை பிரதமர் மோடி மிகவும் சாதுர்யமாக கையாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கண்ணீர் மல்கிய சிவன்.. வாரி அணைத்து, தட்டி கொடுத்து மோடி ஆறுதல்

    டெல்லி: சந்திரயான் 2வை நிலவில் தரையிறக்குவதில் ஏற்பட்ட சறுக்கலை பிரதமர் மோடி மிகவும் சாதுர்யமாக கையாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சந்திரயான் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்துள்ளது. நேற்று இரவு 1.48 மணிக்கு சந்திரயான் 2ன் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. இப்போது வரை அதை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    அதே சமயம் லேண்டருடன் தொடர்பை இழந்தாலும் ஆர்பிட்டர் இன்னமும் இஸ்ரோ உடன் தொடர்பில்தான் இருக்கிறது. இந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை ஆராயும்.

    சந்திரயான் 2 பின்னடைவு.. சர்வதேச மீடியாக்கள் சொல்வது என்ன?சந்திரயான் 2 பின்னடைவு.. சர்வதேச மீடியாக்கள் சொல்வது என்ன?

    எப்படி

    எப்படி

    இந்த நிலையில் சந்திரயான் 2ன் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின் பிரதமர் மோடி உடனடியாக இஸ்ரோ மையத்தில் இருந்து வெளியேறவில்லை. மாறாக அவர் அங்கிருக்கும் இஸ்ரோ அதிகாரிகள் உடன் பேசிக்கொண்டு இருந்தார். இஸ்ரோ அதிகாரிகளை தேற்றும் வகையில் அவர் உருக்கமாக பேசிக்கொண்டு இருந்தார்.

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    மோடி தனது உரையில், குழந்தைகள் உடன் பேசிக்கொண்டு இருந்தார். அதில், அதில், நம்பிக்கையாக இருங்கள். நாடு உங்களை நினைத்து பெருமை கொள்கிறது.நாம் மீண்டும் முயற்சி செய்வோம்.எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகள். நாம் இந்த பயணத்தை தொடர்வோம்.நான் உங்களுடன் இருக்கிறேன், என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

    கிளம்பவில்லை

    கிளம்பவில்லை

    அதோடு அவர் அங்கிருந்து கிளம்பவில்லை. முகத்தில் எந்த உணர்வையும் காட்டிகொள்ளாத பிரதமர் மோடி, அங்கிருக்கும் குழந்தைகளுடன் உரையாடினார். குழந்தைகள் கேட்ட ஆர்வமான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். சில கேள்விகளுக்கு சிரித்துக் கொண்டே பதில் கூறினார்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    அதன்பின் வெளியே சென்ற பிரதமர் மோடி உடனே இஸ்ரோ குறித்து டிவிட் செய்தார். அதில், இந்தியா தனது விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்கிறது. அவர்கள் தங்களால் முடிந்ததை சிறப்பாக கொடுத்துள்ளனர். இந்தியாவை எப்போதும் அவர்கள் பெருமைக்கு உள்ளாக்கி உள்ளனர். நாம் தைரியமாக இருக்க வேண்டிய நேரம் இது, என்றார்.

    பேசினார்

    பேசினார்

    இந்த நிலையில் இன்று காலை உரையாடிய போதும் பிரதமர் மோடி, இன்று சில தடைகள் ஏற்பட்டுள்ளன, ஆனால் அது நமது உறுதியை பலவீனப்படுத்தாது. அதற்கு பதிலாக, அது நம்மை பலப்படுத்துகிறது. நான் உங்களுடன் ஒவ்வொரு கணமும் இருக்கிறேன். நீங்கள் தடைகளை எதிர்கொண்டிருந்தாலும், நம்பிக்கையை இழக்கவில்லை. நான் உங்களை நம்புகிறேன். உண்மையில், இது பன்மடங்கு பலப்படுத்தியுள்ளது, என்று குறிப்பிட்டார்.

    மோடி என்ன சொன்னார்

    மோடி என்ன சொன்னார்

    மோடி மீது பலருக்கும் பல விஷயங்களில் விமர்சனம் இருக்கிறது. அவர் மீது கடுமையான அரசியல் எதிர்ப்பும், முரண்பாடும் மக்களுக்கு இருக்கிறது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் பிரதமர் மோடியாக அவர் செய்த செயல் மிகவும் வியக்கத்தக்கது. இஸ்ரோவின் இந்த சிறிய சறுக்கலை அணுகிய விதம் மிகவும் பாராட்ட தக்கது.

    இஸ்ரோ எப்படி

    இஸ்ரோ எப்படி

    முக்கியமாக இஸ்ரோ விஞ்ஞானிகளை அவர் தேற்றியதும். உலக அரங்கில் இஸ்ரோவுடன் இந்தியா இருக்கிறது என்று அவர் உணர்த்திய விதமும், விஞ்ஞானிகளுடன் அவர் கை கோர்த்து நின்றதும், இஸ்ரோ இயக்குனர் சிவனை அவர் தேற்றியதும் கண்டிப்பாக பாராட்ட கூடிய விஷயம்தான்.

    அவர்தான் தலைவர்

    அவர்தான் தலைவர்

    ஒரு நாட்டின் தலைவர் என்பவர் வெற்றியில் மட்டும் புகழ் மாலையை சூடிக்கொள்ள கூடாது. தோல்வியிலும் முன் நின்று அதை ஏற்க வேண்டும். அப்படி இஸ்ரோவின் சரிவை பிரதமர் மோடி ஒரு வகையில் தாங்கிக் கொண்டுள்ளார் என்றுதான் கூற வேண்டும்.

    English summary
    Chandrayaan 2: PM Modi acted as a good leader in a tough situation yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X