டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரிய பெரிய பள்ளங்களுடன் நிலவின் மேற்பரப்பு.. 2வது முறையாக அசத்தல் படங்களை அனுப்பியது சந்திராயன் 2

Google Oneindia Tamil News

Recommended Video

    Chandrayaan 2 | நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது சந்திரயான்-2- வீடியோ

    டெல்லி: இரண்டாவது முறையாக நிலவின் மேற்பரப்பு படங்கள் அனுப்பியுள்ளது, சந்திரயான்-2 விண்கலம். சுமார் 4375 கி.மீ உயரத்தில் இருந்து எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நிலவில் இருக்கும் பள்ளங்களை இந்த படம் விரிவாக காட்டுகிறது.

    கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து, சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. தற்போது சந்திரனைச் சுற்றிவருகிறது, சந்திரயான்-2 விண்கலம்.

    Chandrayaan-2 sent latest images

    நிலவின் மேற்பரப்பில், பல பள்ளங்களைக் காட்டும் படங்களைக் கிளிக் செய்து அனுப்பியுள்ளது, சந்திரயான்-2. விண்கற்கள் அல்லது வேற்று கிரக பொருட்கள் அல்லது செயற்கைக்கோள்கள் செயலிழந்து நிலவின் மீது விழும்போது அதன் பாதிப்பு காரணமாக இந்த பள்ளங்கள் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    அடுத்த சில நாட்களில், சந்திரயான் -2 தன்னை நிலவுக்கு நெருக்கமாக கொண்டுவருவதற்கான தொடர் செயல்பாடுகளை நிகழ்த்தும். செப்டம்பர் 2ம் தேதி, லேண்டர் விக்ரம் சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்து சந்திரனைச் சுற்றி அதன் சொந்த சுற்றுப்பாதையில் இறங்கும்.

    இறுதியாக செப்டம்பர் 6 ஆம் தேதி, சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் இறங்கி, ஆறு சக்கர ரோவர் பிரக்யானை விடுவிக்கும், இது சந்திர மேற்பரப்பில் சுமார் 14 பூமி நாட்கள் அளவுக்கு சுற்றி வரும்.

    வானத்தையும் விடலையா நீங்க.. விண்வெளியில் இருந்தபடி புருஷன் வங்கி கணக்கை நோட்டம் விட்ட பெண்! வானத்தையும் விடலையா நீங்க.. விண்வெளியில் இருந்தபடி புருஷன் வங்கி கணக்கை நோட்டம் விட்ட பெண்!

    சந்திரயான் -2 நிலவில் ரோவரை தரையிறக்கும் நான்காவது நாடாக இந்தியாவை மாற்றும். சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கி ஆய்வு செய்யும் உலகின் முதல் நாடாகவும் மாறும்.

    சந்திரனின் தெற்கு துருவப் பகுதி பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியைப் படாத பிரதேசம். எனவே இந்த ஆய்வு சந்திரனின் மேற்பரப்பில் நீரைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

    கடந்த 22ம் தேதி முதல் முறையாக, சந்திரயான்-2 விண்கலம் புகைப்பங்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    For the second time, the Chandrayaan-2 spacecraft sent photos taken from an altitude of about 4375 km on the moon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X