டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஷாக் டெஸ்ட் செய்துள்ளோம்.. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.. நம்பிக்கை கொடுக்கும் சந்திரயான் 2!

சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் உடன் எவ்வளவு வேகமாக இணைப்பை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு வேகமாக செய்ய வேண்டும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Unanswered question about Vikram Lander communication lost

    டெல்லி: சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் உடன் எவ்வளவு வேகமாக இணைப்பை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு வேகமாக செய்ய வேண்டும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் அதன் ஷாக் டெஸ்ட் முடிவுகள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

    சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நேற்று முதல்நாள் காலை கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை அதிகாலை இதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    ஆனால் சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் சரியாகவே இயங்கி வருகிறது.சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஒரு வருடம் ஆகும்.

    4 நாட்கள் ஆகிவிட்டது.. இந்த புதிருக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை.. விக்ரம் லேண்டரில் தொடரும் மர்மம்4 நாட்கள் ஆகிவிட்டது.. இந்த புதிருக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை.. விக்ரம் லேண்டரில் தொடரும் மர்மம்

    சுற்றி வரும்

    சுற்றி வரும்

    ஆர்பிட்டர் நிலவை ஒரு வருடம் சுற்றி வரும். முக்கியமாக நிலவின் தென் பகுதியைதான் இது அதிகமாக கவனிக்கும். இந்த ஆர்பிட்டரில் எந்த விதமான சிக்கலும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டிற்கும் ஷாக் செய்து நிறைய சோதனைகளை பெங்களூரில் ஏற்கனவே செய்து இருக்கிறார்கள்.

    தாக்கு பிடிக்கும்

    தாக்கு பிடிக்கும்

    எவ்வளவு வேகத்தில் தரையிறங்கினால் அது நிலவில் தாக்கு பிடிக்கும் என்று சோதனை செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் நிலவில் விக்ரம் லேண்டர் வேகமாக தரையிறங்கி இருந்தாலும் அது தாக்கு பிடிக்க கூடிய அளவிற்கான வேகத்தில்தான் இருந்திருக்கும் என்று கூறுகிறார்கள்.

    என்ன குறைவு

    என்ன குறைவு

    ஏனென்றால் 2 கிமீ தூரத்தில் இருக்கும் போதே அதன் வேகத்தை வெகுவாக குறைத்துவிட்டோம். அதனால் அதிக வேகத்தில் அது கீழே விழுந்திருக்க வாய்ப்பில்லை. ஷாக் டெஸ்டில் தாங்க கூடிய வேகத்திற்கும் குறைவாகவே அது கீழே விழுந்திருக்க வாய்ப்புள்ளது.

    பாதிப்பு

    பாதிப்பு

    அதனால் அதன் சென்சார்கள் பாதிப்பு அடைந்து இருக்காது. ஆகவே நம்பிக்கையுடன் அதை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம் என்று கூறியுள்ளனர். விக்ரம் லேண்டர் போலவே பிரக்யான் ரோவருக்கும் ஷாக் டெஸ்ட் எடுத்து உள்ளனர்.

    குறைவு

    குறைவு

    அதுவும் இந்த வேகமான தரையிறக்கத்தால் பாதிப்பு அடைந்து இருக்க வாய்ப்பில்லை என்றுதான் கூறுகிறார்கள்.அதே சமயம் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் 14 நாட்கள் ஆயுட்காலம் கொண்டது. நிலவில் இது ஒரு நாளுக்கு சமம்.

    என்ன வேகம்

    என்ன வேகம்

    ஆம், நிலவில் 14 நாட்களுக்கு ஒரு பகுதி வெளிச்சமாக இருக்கும். ஒரு பகுதி முழுக்க சூரிய ஒளி படும். அடுத்த 14 நாட்கள் இன்னொரு பகுதியில் சூரிய ஒளி படும். நிலவில் தென் துருவத்தில் சூரியன் பட கூடிய இந்த 14 நாட்கள் விக்ரம் லேண்டர் சோலார் பேனல் மூலம் இயங்கும். அதன்பின் செயல் இழந்து விடும். ஆகவே இதை வேகமாக தொடர்பு கொள்ள இஸ்ரோ அதிகாரிகள் முயன்று வருகிறார்கள்.

    English summary
    Chandrayaan 2: Shock Test results may help to know about Vikram Lander better.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X