டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

7 நாட்களை குறைத்த இஸ்ரோ.. நிலவின் மர்ம தேசத்திற்கு 48 நாளில் செல்லும் சந்திரயான் 2

இஸ்ரோ அனுப்பும் சந்திரயான் 2 எதிர்பார்த்ததை விட மிக வேகமாக நிலவை சென்று அடையும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    விண்ணில் பாய தயாராகும் சந்திரயான் 2.. நிலவின் தென்துருவத்தை ஆராயும்

    டெல்லி: இஸ்ரோ அனுப்பும் சந்திரயான் 2 எதிர்பார்த்ததை விட மிக வேகமாக நிலவை சென்று அடையும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நிலவில் தென் துருவத்தில் என்ன இருக்கிறது? இந்த ஒரு கேள்விக்கு இன்னும் சில நாட்களில் பதில் கிடைத்துவிடும். இந்த மிக முக்கியமான கேள்வியை சுமந்து கொண்டுதான் சந்திரயான் 2 நிலவை நோக்கி இன்று பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

    இன்று மதியம் 2.54 மணிக்கு சரியாக நிலவை நோக்கி சந்திரயான் 2 ஏவப்படும். சந்திரயான் 2 பயணம் மிக நீண்ட அழகான பயணமாக இருக்க போவது குறிப்பிடத்தக்கது.

    எப்படி தொடங்கும்

    எப்படி தொடங்கும்

    சரியாக இன்று மதியம் 2.54 மணிக்கு சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும். இந்த சந்திரயான் 2வை கிரயோசனிக் எஞ்சின் கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணில் கொண்டு செல்லும். ஆனால் இந்த ராக்கெட் பூமியின் சுற்றுவட்டப்பாதை முடியும் வரை மட்டுமே சந்திரயான் 2வை கொண்டு செல்லும். அதன்பின் சந்திரயான் 2 தானாக இயங்க தொடங்கும்.

    சூப்பர்

    சூப்பர்

    சந்திரயான் 1 சென்றது போல இது இயற்கையின் இயற்பியல் விதிகளை வைத்து பூமியை சுற்றி சுற்றி சென்று பின் நிலவைஅடையும். பூமியின் வட்டப்பாதையை தாண்டியவுடன் சந்திரயான் 2 உடனடியாக எஞ்சின் மூலம் வேகமாக செயல்பட்டு நிலவை நோக்கி நகர தொடங்கும்.

    நிலவை நோக்கி செல்லும்

    நிலவை நோக்கி செல்லும்

    சந்திரயான் 2ல் இருக்கும் எஞ்சின்கள் செயல்பட தொடங்கியதும், அதில் இருந்து வரும் உந்து சக்தி மூலம் நிலவை நோக்கி சந்திரயான் 2 நகரும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நிலவு பூமியை சுற்ற கூடியது. இதனால் நிலவிற்கு ஏற்றபடி சந்திரயான் 2 அடிக்கடி திசையை மாற்ற வேண்டி இருக்கும். இதை சரியாக ஏற்கனவே இஸ்ரோ கணித்து உள்ளது.

    திசை

    திசை

    இதனால் நிலவு நகரும் இடத்தை நோக்கி சந்திரயான் 2 கொஞ்சம் கொஞ்சமாக திசை மாறி மாறி செல்லும். இப்படியாக நிலவை நோக்கி 48 நாட்கள் நெடும் பயணத்தை சந்திரயான் 2 செய்ய இருக்கிறது. செப்டம்பர் 6ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை சந்திரயான் 2 அடையும். ஆனால் அங்குதான் முக்கியமான சிக்கல் இருக்கிறது.

    என்ன சிக்கல்

    என்ன சிக்கல்

    சந்திரயான் 2 நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தவுடன் வேகமாக நிலவின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும். இதனால் சந்திரயான் 2விற்கு எதிர் உந்து விசையை அளிக்க எதிர்புறத்தில் சில திரஸ்டர் எஞ்சின்கள் இருக்கும். இது எதிர் திசையில் எஞ்சினை இயக்கி சந்திரயான் 2வின் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும்.

    முன்னதாக இறங்கும்

    முன்னதாக இறங்கும்

    சந்திரயான் 2ல் உள்ள ஆர்பிட்டார் எனப்படும் ஆராய்ச்சி செயற்கைகோள் நேரடியாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அதன்படி விக்ரம் என்ற லேண்டர் கீழே இறங்கும். இது பாராசூட் மற்றும் எதிர் எஞ்சின்கள் மூலம் வேகம் குறைக்கப்படும். கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்த 1 கிமீ/ நேரம் க்கும் குறைவான வேகத்தில் மெதுவாக நிலவில் இறங்கும்.

    அதன்பின் என்ன

    அதன்பின் என்ன

    அதன்பின் செப்டம்பர் 7ம் தேதி சரியாக விக்ரம் லேண்டரில் உள்ள பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆராய்ச்சிகளை செய்யும். இந்த இரண்டும் 14 நாட்கள் ஆராய்ச்சி செய்யும். ஆர்பிட்டார் சேட்டிலைட் மட்டும் 1 வருடம் ஆராய்ச்சி செய்யும்.

    எப்படி குறைந்தது

    எப்படி குறைந்தது

    முதலில் இந்த பயணம் 56 நாட்கள் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஏற்கனவே 7 நாட்கள் தாமதம் ஆனதால், இந்த பயணத்தை 48 நாட்களில் முடிக்க இஸ்ரோ முடிவெடுத்துள்ளது. 48 நாட்களில் சரியாக முடித்தால்தான் ரோவரை சரியாக நிலவில் குறிக்கப்பட்டு இருக்கும் தென் துருவ பகுதியில் இறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chandrayaan-2 will reach the moon in just 48 days, which is less than previously planned 56 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X