'இவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்'..பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்து நடிகர் சோனு சூட் கருத்து
டெல்லி; பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நடிகர் சோனு சூட் சூசகமாக கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
பிப்ரவரி 14 -ம் தேதி பஞ்சாப் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. மொத் அமராவதி ஆற்றில் 6 பேர் இறப்புக்கு காரணமே இதுதான்.. திமுக மீது ஓ.பி.எஸ் பகீர் புகார்.. பரபர அறிக்கைதம் 117 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறையும் ஆட்சியை தக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை தட்டி பறிக்க வேண்டும் என்று பாஜக துடியாய் இருக்கிறது.ஒருபக்கம் ஆம் ஆத்மியும், சிரோமணி அகாலிதளமும் களத்தில் இருக்கிறது.

பஞ்சாப் தேர்தல் களம்
முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் லோக் காங்கிரஸ் கட்சியும் பாஜக பக்கம் நிற்கிறது. இந்த கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் ஏற்கனவே பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சரண்ஜித் சிங் சன்னி சம்கவுர் சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார் என்றும் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.

சோனு சூட்டின் சகோதரி போட்டி
இதேபோல் அண்மையில் காங்கிரஸில் இணைந்த நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா மோகா தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. பஞ்சாபில் காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் யார் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நடிகர் சோனு சூட் சூசமாக கூறியுள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தேநீர் இடைவேளைக்குப் பிறகும் சரண்ஜித் சன்னி பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

நடிகர் சோனு சூட் பேட்டி
அதாவது மாநிலத்தின் உயர் பதவியில்(முதல்வர்) அதிக நேரம் கிடைக்காததால், அவருக்கு காங்கிரஸ் தலைமை மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சோனு சூட் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில், 'நான் முதல்வர் சன்னியை சந்தித்தேன், அவர் ஒரு அடிப்படை மனிதர். அவர் இயற்கையாகவே உங்களை சிரிக்க வைக்கிறார். கடந்த மூன்று மாதங்களில் அவர் முதலமைச்சராக இருந்த பணி பாராட்டுக்குரியது. ஆனால் யாரும் முதல்வராக பணியாற்றுவதற்கு இது மிகக் குறைந்த நேரமே.

சரண்ஜித் சிங் சன்னிக்கு ஆதரவு
நீங்கள் பேட் செய்யப் போய் பந்தின் மேல் கண்ணை வைத்தது போல் இருக்கிறது. ஆனால் திடீரென்று தேநீர் இடைவேளை அறிவிக்கப்பட்டது. தேநீர் இடைவேளைக்கு(தேர்தலுக்கு பிறகு) பிறகும் அவர் பேட்டிங் செய்ய வேண்டும்(முதல்வராக வர வேண்டும்) என்று நான் நினைக்கிறேன். நான் காங்கிரஸ் தலைமையைச் சந்தித்தபோது, நீங்கள் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை வெளியிடுவது மிகவும் முக்கியம் என்று அவர்களிடம் சொன்னேன்'' என்று சோனு சூட் தெரிவித்தார்.

நவ்ஜோத் சிங் சித்து நல்ல மனிதர்
மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து நல்ல மற்றும் நேர்மையான மனிதர் என்றும் அவர் எப்போதும் இதயத்தில் இருந்து பேசுவதாகவும் சோனு சூட் கூறினார். அதே வேளையில் தான் எந்தக் கட்சியுடனும் தொடர்பு கொள்ளவில்லை என்றும், சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த தனது சகோதரியை மட்டுமே ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது சகோதரி குறித்து..
தனது சகோதரி மாளவிகா போட்டியிடும் மோகா தொகுதி குறித்து பேசிய சோனு சூட் மோகாவில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தர்மசாலாக்கள் (சத்திரம்) என் குடும்பத்தினரால் கட்டப்பட்டது.
என் அம்மா நிறைய குழந்தைகளுக்கு இலவசமாக கற்பித்துள்ளார். நானும், சகோதரியும் எங்களது தாய் வழியை பின்பற்றுகிறோம் என்று தெரிவித்தார்.