டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐஎன்எக்ஸ் வழக்கு: ப.சிதம்பம், கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா பணமோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை இன்று டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த தகவலை, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில், அப்போது, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், நிதியமைச்சராக இருந்த காலத்தில், ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு வெளிநாட்டு நிதிகளை சட்டத்திற்கு முறைகேடாக பெறுவதற்கு உதவி செய்தார் என்பது குற்றச்சாட்டு.

Charge sheet Against P Chidambaram, Son In INX Media Money Laundering Case by ED

மீடியா தொழிலதிபர்களான, பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானது ஐஎன்எக்எஸ் நிறுவனம்.
ஒப்பந்தத்திற்காக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு, லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

சீனா ராணுவ குவிப்பு.. இந்திய படைகளும் விரைந்தன.. "சுய மரியாதையை சீண்டினால்.."- ராஜ்நாத்சிங் அதிரடி

சிறையிலுள்ள இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை, இந்த வழக்கை பதிவு செய்திருந்தது.

Charge sheet Against P Chidambaram, Son In INX Media Money Laundering Case by ED

கடந்த ஆண்டு, சிபிஐ, சிதம்பரத்தின் தெற்கு டெல்லி வீட்டின் சுவர்களை ஏறி குதித்து சென்று அவரை கைது செய்தனர். பின்னர் 100 நாட்களுக்கு பிந்தைய சிறைவாசத்திற்கு பிறகு சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறை, தற்போது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Enforcement Directorate has filed a charge sheet, in INX media case involving former Union Minister P Chidambaram and his son Karti P Chidambaram and others, in a Delhi Court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X