டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடைக்கலம் தேடி கைகுழந்தையுடன் வந்த பழங்குடியின பெண்.. இரக்கமின்றி தரதரவென வெளியேற்றும் கொடூர வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    குழந்தையுடன் வந்த பழங்குடியின பெண்ணை இரக்கமின்றி வெளியேற்றும் கொடூர வீடியோ

    டெல்லி: சத்தீஸ்கரில் மழை, வெள்ளத்தால் தனது 3 மாத குழந்தையுடன் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண், பள்ளி விடுதியில் தஞ்சமடைந்த நிலையில் அவரை அங்கிருந்து வெளியேற கூறியும் அவர் மறுத்ததால் சிறிதும் ஈவு இரக்கமின்றி பள்ளித் தாளாளரின் கணவர் அந்த பெண்ணை பிடித்து இழுத்து வெளியே தள்ளும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் கனமழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண் ஒருவர் தனது 3 மாத குழந்தையுடன் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் வெள்ளத்திலிருந்து குழந்தையுடன் வெளியேறிய அந்த பெண் கொரியா மாவட்டத்தில் பர்வானி கன்யா ஆஷ்ரம் என்ற பள்ளி விடுதியில் தங்கினார். இதையறிந்த பள்ளித் தாளாளர் சுமீலா சிங்கின் கணவர் ரங்லால் சிங், விடுதி துப்புரவு பணியாளர் ஒருவருடன் சென்று விடுதியை விட்டு வெளியேறுமாறு கூறுகிறார்.

    துணியுடன் இழுத்த நபர்

    துணியுடன் இழுத்த நபர்

    ஆனால் அந்த பெண்ணோ வெளியேற மறுத்துவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ரங்லால், அந்த பெண் படுத்துள்ள கட்டிலில் இருந்த துணியுடன் அவரை இழுக்கிறார்.

    தள்ளிய ரங்கலால்

    தள்ளிய ரங்கலால்

    இதில் எடறி விழும் அந்த பெண்ணை ரங்கலால் தரதரவென இழுக்கிறார். அந்த பெண்ணின் ஆடைகள் களைந்த நிலையிலும் விடாமல் வெறிக் கொண்ட ரங்கலால் இழுத்து கொண்டு வந்து வெளியே தள்ளிவிடுகிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வழக்கு பதிவு

    வழக்கு பதிவு

    இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் பழங்குடியின நலத் துறையும் ஆளும் காங்கிரஸ் ஆட்சியும் நேரில் சென்று விசாரணை நடத்தியது. ரங்கலால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கைக்குழந்தை

    கைக்குழந்தையுடன் அடைக்கலம் தேடி வந்த பெண்ணிடம் பேயை விட கொடூரமாக நடந்து கொண்ட ரங்கலாலுக்கும் அதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அவரது மனைவிக்கும், துப்புரவு பெண் பணியாளருக்கும் கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    Chhattisgarh:Ranglal Singh,husband of School Superintendent Sumila Singh misbehaved with a cleaner at Barwani Kanya Ashram in Korea, after she took shelter at students' hostel with her 3-month-old baby.Police says,“FIR filed.Probe on.Accused will be arrested soon.”
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X