• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

உயரும் கடல்மட்டம்.. 2050 ஆம் ஆண்டு சென்னை மூழ்கும் அபாயம்?.. அமெரிக்க ஆய்வறிக்கையில் பகீர் தகவல்

|
  Rising Seas Will Erase More Cities by 2050, New Research Shows

  டெல்லி: கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால் 2050-ஆம் ஆண்டில் சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்கள் மூழ்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  அமெரிக்காவை சேர்ந்த கிளைமேட் சென்ட்ரல் என்ற நிறுவனம் இது குறித்த ஆய்வை நடத்தியுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறுகையில் இந்தியாவில் 7500 கி.மீ. தூரத்துக்கு கடலோர பகுதி உள்ளது. சீனாவுக்கு பிறகு கடல் மட்ட உயர்வால் அதிக ஆபத்து உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

  கடலில் உள்ள உப்பு நீர் பயிரிடும் இடத்தில் நுழைந்தால் அந்த இடம் பயிர் வைக்க ஏற்ற இடமாக இருக்காது. இந்த அபாயம் ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்துக்கு இருக்கிறது. இது சட்டவிரோத புலம் பெயர்தலாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படும்.

  கியார் புயலில் சிக்கிய 200க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்

  கடலோர மாவட்டங்கள்

  கடலோர மாவட்டங்கள்

  ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் கடலோர பகுதிகளில் வாழும் 31 மில்லியன் மக்கள் வெள்ளப்பெருக்கால் பல்வேறு ஆபத்துகளை சந்திக்கின்றனர். 2050ஆம் ஆண்டு இந்த ஆபத்தால் 35 மில்லியன் மக்களும் 2100 ஆண்டில் 51 மில்லியன் மக்களும் பாதிக்கப்படுவர்.

  500 மில்லி

  500 மில்லி

  தற்போது உலகம் முழுவதும் 250 மில்லியன் மக்கள் கடலோர பகுதிகளில் வசித்து வருகின்றனர். உலகமெங்கும் கடல் மட்டம் 11- 16 செ.மீ. வரை உயர்கிறது. அதாவது 20ஆவது நூற்றாண்டில் 500 மில்லி கோககோலா பாட்டிலில் பாதி அளவு ஆகும்.

  கடல் நீர் மட்டம்

  கடல் நீர் மட்டம்

  கார்பன் வெளியேற்றத்தை உலகம் முழுவதும் வெகுவாக குறைத்துவிட்டாலும் 2050ஆம் ஆண்டில் அரை மீட்டர் அளவுக்காவது உயரும். அதாவது இரு 500 மில்லி கோககோலா பாட்டில்களை ஒன்றன் மீது ஒன்று நிறுத்தினால் எத்தகைய உயரத்தை தருமோ அத்தகைய உயரத்துக்கு கடல் மட்டம் உயரும்.

  பனிக்கட்டிகள்

  பனிக்கட்டிகள்

  தாழ்வான பகுதியில் 70 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர். அவர்கள் சீனா, இந்தியா, வங்கதேசம், வியட்னாம், இந்தோனேஷியா, தாய்லாந்து, பிலிப்பின்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இந்த நாட்டினருக்கு ஆபத்து உள்ளது. கார்பன் வெளியேற்றத்தால் உலக வெப்பநிலை உயர்ந்து பனிக்கட்டிகள் உருகும் அபாயம் ஏற்படும்.

  20 கோடி பேர்

  20 கோடி பேர்

  2050ஆம் ஆண்டுக்குள் கடல் மட்ட உயர்வால் உலக அளவில் நில பகுதியில் வசிக்கும் 30 கோடி பேர் வெள்ளத்தால் மூழ்கும் அபாயம் இருக்கிறது. இது போல் 2100-இல் நிலத்தில் வசிக்கும் 20 கோடி பேர் வெள்ளத்தால் மூழ்குவர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  மும்பை

  மும்பை

  பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஒடிஸா, குஜராத்தின் கடலோர மாவட்டங்கள், கேரளத்தின் கொச்சி உள்ளிட்ட இடங்களில் கடல்நீர் மட்டம் உயரும். இதில் சென்னை தான் அபாயகரமான பகுதியில் இருக்கிறது. எனவே கார்பன் உமிழ்வதை குறைத்துக் கொண்டால் ஆபத்து குறைய வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Chennai, Kolkatta, Mumbai may be drown in sea water by 2050 as the result of carbon emission, Climate Central's report says.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more