டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த வருஷமே.. சேலம் 8 வழிச்சாலை பணிகள் தொடங்கும்.. நிர்மலா சீதாராமன் பரபரப்பு அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சென்னை- சேலம் 8 வழிசாலை திட்டத்துக்காக பணிகள் நடப்பாண்டிலேயே தொடங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

லோக்சபாவில் இன்று மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு நெடுஞ்சாலை திட்டப் பணிகளை குறிப்பிட்டிருந்தார் நிர்மலா சீதாராமன்.

Chennai – Salem expressway construction will start in 2021-22, says Nirmala Sitharaman

அதில், டெல்லி- மும்பை விரைவு நெடுஞ்சாலை திட்டத்தில் எஞ்சிய 260 கி.மீ பணிகள் மார்ச் 31-ந் தேதிக்குள் முடிக்கப்படும்; பெங்களூரு- சென்னை இடையேயான 278 கி.மீ விரைவு நெடுஞ்சாலை திட்டப் பணிகள் நடப்பு நிதி ஆண்டில் தொடங்கப்படும் என கூறியிருந்தார்.

மேலும் சென்னை- சேலம் இடையேயான 277 கி.மீ நெடுஞ்சாலை பணிகள் ( 8வழி பசுமை நெடுஞ்சாலை) நடப்பாண்டிலேயே தொடங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

பட்ஜெட்.. எந்த பொருட்கள் விலையெல்லாம் கூடப்போகிறது.. விலை குறையும் பொருட்கள் எவை? பட்ஜெட்.. எந்த பொருட்கள் விலையெல்லாம் கூடப்போகிறது.. விலை குறையும் பொருட்கள் எவை?

சென்னை- சேலம் 8வழி சாலை திட்டத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. மேலும் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்தலாம் என்ற அறிவிக்கையை கடந்த டிசம்பர் 8-ம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதற்கு எதிரான மறு ஆய்வு மனுவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

English summary
Finance Minister Nirmala Sitharaman said that "Chennai – Salem corridor: 277 km expressway will be awarded and construction would start in 2021-22.".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X