டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோர்ட் ரூம் சிறிதாக இருக்கே.. ஆச்சரியப்பட்ட ப.சிதம்பரம்.. ஆமா சார்.. ஆமோதித்த சிபிஐ அதிகாரிகள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள்

    டெல்லி: சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி முன்பு ஆஜர்படுத்த ப சிதம்பரம் கொண்டுவரப்பட்ட அந்த அறை மிகவும் சிறியதாக இருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்தார்.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று இரவு டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் ப சிதம்பரத்தை கைது செய்தனர். அவரை டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

    Chidambaram is surprised in CBI court , he feels that Courtroom is so small

    சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதுடெல்லியில் உள்ள ரோஸ் அவியின்யூ காம்ப்ளக்ஸில் செயல்படுகிறது. இந்த ரோஸ் அவியின்யூ காம்ப்ளக்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது.

    இங்கு தான் அனைத்து ஊழல் வழக்குகளும் விசாரிக்கப்டுகின்றனர். இந்நிலையில் சிதம்பரம் நீதிமன்றத்துக்குள் நீதிபதி ஆஜர்படுத்த கொண்டுவரப்பபட்ட போது நீதிமன்றத்தின் அறையை மிகவும் சிறியதாக இருப்பதை கண்டு ஆச்சர்யப்பட்டார்.

    அப்போது தன்னை அழைத்து வந்த சிபிஐ அதிகாரிகளிடம் நீதிமன்ற அறை மிகவும் சிறியதாக உள்ளது. புதிய நீதிமன்றம் இங்கு சிக்கலாக அமைந்திருக்கிறது. நீதிமன்றம் அறைகள் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் என்றார்.

    அதற்கு பதில் அளித்த சிபிஐ அதிகாரிகள், ஆமாம் சார் இந்த நீதிமன்ற அறைகள் மிகச்சிறியவை தான். நிலக்கரி சுரங்க வழக்கு உள்பட அனைத்து பெரிய வழக்கிலும் இது ஒரு பிரச்சனையாக உள்ளது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் ஏன் வழக்கறிஞர்களும் கூட நீதிமன்றத்துக்குள் ஒரே நேரத்தில் இருப்பது சாத்தியமில்லை என்றார்கள்.

    English summary
    The courtrooms are so small. I thought I will have better courtrooms, Chidambaram told the CBI officers
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X