டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குற்றவியல் நடைமுறையை டெல்லி காவல்துறை கேலிக்கூத்தாக்கியுள்ளது.. டெல்லி கலவரம் குறித்து ப சிதம்பரம்

Google Oneindia Tamil News

டெல்லி : கலவர வழக்கின் துணை குற்றப்பத்திரிகையில் சீதாராம் யெச்சூரி மற்றும் ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட பலரது பெயர்களை சேர்ப்பதன் மூலம் டெல்லி காவல்துறை குற்றவியல் நீதி முறையை கேலிக்குள்ளாக்கியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

டெல்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிஏஏ ஆதரவு மற்றும் சிஏஏ எதிர்ப்பாளர்களிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் 53 உயிரிழந்தனர். கொல்லப்பட்டனர். டெல்லி போலீசாரால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் 40 முஸ்லிம்களும், 13 இந்துக்களும் உயிரிழந்ததாக கூறியிருந்தனர்.

இந்த கலவரத்தில் பெரும் சதி இருப்பதாக வழக்கு பதிவு செய்த போலீசார் , பிஞ்ச்ரா டோட் உறுப்பினர்களான தேவங்கனா கலிதா மற்றும் நடாஷா நர்வால் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் குல்பிஷா பாத்திமா உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்

டெல்லி கலவர வழக்கில் பாரபட்சம் காட்டாதீங்க.. டெல்லி போலீஸுக்கு.. ரிபைரோ அதிரடி கடிதம்டெல்லி கலவர வழக்கில் பாரபட்சம் காட்டாதீங்க.. டெல்லி போலீஸுக்கு.. ரிபைரோ அதிரடி கடிதம்

யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ்

துணை குற்றப்பத்திரிக்கையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஸ்வராஜ் அபியானின் தலைவர் யோகேந்திர யாதவ், பொருளாதார நிபுணர் ஜயதி கோஷ், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ஆர்வலர் அபூர்வாநந்த், மற்றும் ஆவணப்பட இயக்குநர் ராகுல் ராய் ஆகியோர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

டெல்லி காவல்துறை

டெல்லி காவல்துறை

இந்நிலையில் சீதாராம் யெச்சூரி, ஸ்வராஜ் அபியானின் தலைவர் யோகேந்திர யாதவ், உள்ளிட்டோர் மீது துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதன் மூலம் டெல்லி காவல்துறை குற்றவியல் நீதி முறையை கேலிக்குள்ளாக்கியுள்ளதாக ப சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

குற்றப்பத்திரிக்கை

குற்றப்பத்திரிக்கை

குற்றம் சாட்டப்பட்டவர் (குல்பிஷா பாத்திமா) தனது அறிக்கையில் ஒரு பெயரைக் குறிப்பிட்டால், அந்த நபர் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவராக பெயரிடப்படுவார் என்றால் அது சட்டமாகவே இருக்க முடியாது என்று கூறியுள்ளார். தகவல் மற்றும் குற்றப்பத்திரிகைக்கு இடையில் விசாரணை மற்றும் உறுதிப்படுத்தல் எனப்படும் முக்கியமான நடவடிக்கைகள் உள்ளன என்பதை டெல்லி காவல்துறை மறந்துவிட்டதா". என்றும் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

குற்றப்பத்திரிக்கை ஏன்

குற்றப்பத்திரிக்கை ஏன்

இதனிடையே டெல்லி காவல்துறை அதிகாரிகள், "குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை ஒழுங்கமைத்து, உரையாற்றிய ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தில் இவர்களது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்படுவதில்லை" என்றும் கூறியுள்ளது.

English summary
“Delhi police have brought the criminal justice system to ridicule by naming Mr. Sitaram Yechury and many other scholars and activists in a supplementary charge sheet in the Delhi riots case,” Chidambaram said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X