டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலைவாய்ப்பின்மை, வருமானம் குறைவும் இளைஞர்களை கொந்தளிக்க செய்யும்: ப. சிதம்பரம்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மையும் வருமானம் குறைவும் இளைஞர்களை பெருமளவில் கொந்தளிக்க செய்துவிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளதாவது:

Chidambraam warns Rising unemployment, declining income may anger youth

ஒட்டுமொத்த தேசமும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராகவும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தி வருகிறது. தேசம் ஆபத்தில் இருக்கிறது என்பதை இவை வெளிப்படுத்துகின்றன.

வேலைவாய்ப்பின்மை அதிகரித்தும், வருவாய் குறைந்தும் வந்தால் இளைஞர்கள் கொந்தளிக்க நேரிடும் அபாயமும் உள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டு எண் பணவீக்க விகிதம் 7.35 ஆக டிசம்பரில் இருக்கிறது.

மோடி பிரதமராக பதவி ஏற்ற 2014-ம் ஆண்டு ஜூலையில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் 7.39%. இப்போது 7.35%

உணவுப் பொருள் பணவீக்க விகிதமானது 14.12% ஆக உள்ளது. இதனால் காய்கறிகள் விலை 60% உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை கிலோ ரூ100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் பாஜக வாக்குறுதி அளித்த அச்சே தின் முழக்கமா?

காங்கிரஸ் அறிக்கையை ஸ்டாலின் மீது வைத்த குற்றச்சாட்டாகவே பார்க்கிறோம்.. டிஆர் பாலு பரபர!காங்கிரஸ் அறிக்கையை ஸ்டாலின் மீது வைத்த குற்றச்சாட்டாகவே பார்க்கிறோம்.. டிஆர் பாலு பரபர!

இவ்வாறு சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Former Union Minister P Chidambraam has warned that the Rising unemployment, declining income may anger youth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X