டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்ரீநகருக்கு நானும் செல்வேன்.. லகானை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்ரீநகருக்கு நானும் செல்வேன் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீருக்கு கடந்த 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நீக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.

இதையடுத்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

சசிகலா விடுதலையை தினகரன் விரும்பவில்லை... தாய்மாமா திவாகரன் புது புகார்சசிகலா விடுதலையை தினகரன் விரும்பவில்லை... தாய்மாமா திவாகரன் புது புகார்

வேகம்

வேகம்

காஷ்மீரில் மக்களின் நிலையை அறிய ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் அங்கு ஸ்ரீநகர் விமான நிலையம் வரை சென்றனர். அங்கு அவர்களை அந்த பிரதேசத்தின் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் போன வேகத்துக்கு திரும்பி வந்தனர்.

மனுவில்

மனுவில்

இந்த நிலையில் காஷ்மீரில் தமது வீட்டுக்குச் செல்ல அனுமதிக்குமாறு குலாம்நபி ஆசாத் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் அவர் கூறுகையில் காஷ்மீரில் உள்ள பரமுல்லா மற்றும் அனந்தநாக் செல்ல அனுமதி கோருகிறேன் என மனுவில் கோரியுள்ளார்.

மத்திய அரசு

மத்திய அரசு

அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், காஷ்மீருக்கு குலாம் நபி ஆசாத் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அங்கு செல்லும் அவர் அரசியல் செய்யக் கூடாது. காஷ்மீரில் இயல்புநிலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறேன் என்றார்.

பரபரப்பு

பரபரப்பு

இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் செல்ல போகிறேன். காஷ்மீரில் உள்ள நிலையை ஆய்வு செய்ய போகிறேன் என்றார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.

English summary
Chief Justice of India Ranjan Gogoi says that he will also go to Srinagar to assess the Kashmir situation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X