டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மருத்துவர்கள், பொதுமக்களுக்கு ஊக்கம்.. மே 3ல் அணிவகுக்கும் முப்படைகள்.. பிபின் ராவத் அசத்தல் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பாதிப்புக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் நாட்டு மக்களுடன் முப்படைகளும் கைகோர்த்து உற்சாகப்படுத்த உள்ளதாக, இந்தியாவின் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் இணைந்து தெரிவித்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு கூட்டாக செய்தியாளர்களை இவர்கள் சந்திக்க உள்ளதாக மாலை திடீரென அறிவிக்கப்பட்டது. முக்கியமான ஒரு விஷயம் தொடர்பாக அவர்கள் அறிவிப்பு வெளியிட உள்ளதாக ஏஎன்ஐ செய்தி ஏஜென்சி தெரிவித்திருந்தது.

Chief of Defence Staff General Bipin Rawat and three service chiefs to hold press meet

பொதுவாக சாதாரண விஷயங்களுக்காக முப்படை தளபதிகள் இணைந்து செய்தியாளர் சந்திப்பு நிகழ்ந்தது கிடையாது என்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.

இந்த நிலையில், மாலை 6 மணிக்கு தளபதிகளுடன், அமர்ந்து, தனது பேட்டி வீடியோவை வெளியிட்டார், பிபின் ராவத்.

அப்போது அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் தனது ஒற்றுமையை காட்டி வருகிறது. மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், பொதுமக்கள் கைகள் தட்டியும், விளக்கை ஏற்றியும், தங்கள் ஒற்றுமையை காட்டியுள்ளனர்.

ராணுவம் தங்கள் பங்குக்கு மருத்துவ பணியாளர்களுக்கு மற்றும் இந்தப் பிரச்சினையில் முன்னிலையில் நின்று செயல்படக்கூடிய ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இதை செயலில் காட்டும் விதமாக, மே 3ஆம் தேதி முப்படைகளும் ஒவ்வொரு வகையில் வெளிப்படுத்த உள்ளனர்.

கிம் ஜாங் உன் கட்டுப்பாட்டில்தான் வடகொரியா ராணுவம் இன்னமும் இருக்கிறது: யு.எஸ். மூத்த ராணுவ தளபதி கிம் ஜாங் உன் கட்டுப்பாட்டில்தான் வடகொரியா ராணுவம் இன்னமும் இருக்கிறது: யு.எஸ். மூத்த ராணுவ தளபதி

மே 3ஆம் தேதி மாலை, கடற்படையின் போர்க்கப்பல்களில், ஒளிவிளக்குகள் மிளிரும். அவற்றின் ஹெலிகாப்டர்கள், மருத்துவமனைகள் மீது மலர்களைத் தூவிச் செல்லும். இதேபோன்று, விமானப்படை விமானங்கள், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் முதல், கேரளாவின் திருவனந்தபுரம் வரை வடக்கிலிருந்து தெற்காக அணிவகுத்து பறந்து செல்லும். மற்றொரு மார்க்கத்தில், கிழக்கே அஸ்ஸாம் மாநிலம் திப்ருகார் பகுதியிலிருந்து மேற்கே குஜராத் மாநிலம் கட்ச் வரை விமானங்கள் பறந்து செல்லும். இதில் ராணுவத்தின் சரக்கு மற்றும் போர் விமானங்களும் இடம் பெற்றிருக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Chief of Defence Staff General Bipin Rawat and three service chiefs to hold press conference on important issues at 6 pm today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X