டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்காணிப்பு வளையத்தில் தலைநகரம்.. 15 வயதுக்கு கீழுள்ளோருக்கு குடியரசு தின விழாவில் அனுமதி கிடையாது

டெல்லி குடியரசு தின விழாவில் 15 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 15 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என டெல்லி போலீஸ் பல்வேறு கெடுபிடிகளையும் விதித்துள்ளது.

வரும் 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது.. இதற்காக தலைநகரம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

குடியரசு தின விழாயையொட்டி, முப்படைகளின் அணிவகுப்பு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...

மகாத்மா காந்திக்கு பிடித்த பாடல் குடியரசு தினவிழாவில் இருந்து நீக்கம்-மீண்டும் சர்ச்சை, காரணம் என்ன?மகாத்மா காந்திக்கு பிடித்த பாடல் குடியரசு தினவிழாவில் இருந்து நீக்கம்-மீண்டும் சர்ச்சை, காரணம் என்ன?

பாதுகாப்பு

பாதுகாப்பு

எனவே, டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது... எந்தவித அசம்பாவிதங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்புப்படை வீரர்களும், போலீசாரும் எந்நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்... மேலும்,, டெல்லியை சுற்றியுள்ள ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்களை சரிபார்க்கும் பணியும் நடந்து வருகிறது.. டெல்லியில் தற்போது கொரோனாவைரஸ் பரவல் அதிகமாக உள்ளது..

டிக்கெட்டுகள்

டிக்கெட்டுகள்

எனவே, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அணிவகுப்பை பார்வையிட 4,000 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுவதாக செய்திகளும் வெளியாகின. இந்நிலையில், குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி போலீஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது... அதில் உள்ளதாவது: காலை 7 மணிக்கே பார்வையாளர்கள் பகுதி திறந்துவிடப்படும்.. பார்க்கிங் வசதி குறைக்கப்பட்டுள்ளது.. அதனால், விழாவுக்கு வருபவர்கள் வாடகை கார் அல்லது ஒரே காரில் ஷேர் செய்து வரலாம்..

 அடையாள அட்டை

அடையாள அட்டை

கண்டிப்பாக அடையாள அட்டைகள் கொண்டு வர வேண்டும்.. பாதுகாப்பு துறை சோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்... ஒவ்வொரு பார்க்கிங்கிலும், ரிமோட் கன்ட்ரோல் வசதியுள்ள கார் சாவிகளை ஒப்படைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கம்.. அங்கேதான் தங்களது கார் சாவிகளை ஒப்படைக்க வேண்டும்.. அதன்பிறகே விழா நடக்கும் இடத்திற்கு வரவேண்டும்.

 அனுமதி இல்லை

அனுமதி இல்லை

அனைவருமே 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதுடன், அதற்கான சர்ட்டிபிகேட்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்.. 15 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி கிடையாது.. அன்றைய தினம், 71 மாவட்டங்களின் போலீஸ் கமிஷனர்கள், 213 துணை கமிஷனர்கள், 753 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம், 27 ஆயிரத்து 723 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' என்று டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Children below 15 people not vaccinated with both doses barred from Republic day function, says Delhi Police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X